Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தெலங்கானா சுரங்க விபத்து: 8 தொழிலாளர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு.. வெளியான அதிர்ச்சி காரணம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 26, 2025
in அரசியல் செய்திகள்
0
தெலங்கானா சுரங்க விபத்து: 8 தொழிலாளர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு.. வெளியான அதிர்ச்சி காரணம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 25, 2025 10:16 AM IST

தெலங்கானாவில் சுரங்க விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்கள் மீட்பு முயற்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது.

தெலங்கானா சுரங்க விபத்துதெலங்கானா சுரங்க விபத்து
தெலங்கானா சுரங்க விபத்து

தெலங்கானாவில் சுரங்க விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்கள் உயிருடன் இருக்க மிக குறைவான வாய்ப்பே உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நல்கொண்டா மாவட்டத்துக்கு ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து குடிநீர் கால்வாய் அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பணிகளுக்கு இடையே நாகர் கர்னூல் மாவட்டம் தோமலபென்ட்டா என்ற பகுதியில் சுரங்கம் கட்டுமானப் பணியின் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த திட்ட பொறியாளர் மனோஜ் குமார், கள பொறியாளர் ஸ்ரீநிவாஸ், ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ஊழியர்கள் சந்தீப் சாஹு, ஜக்தா ஜெஸ், சந்தோஷ் சாஹூ, அனுஜ் சாஹூ, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆபரேட்டர் சன்னி சிங், பஞ்சாபைச் சேர்ந்த ஆபரேட்டர் குர்பிரீத் சிங் ஆகியோர் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், 3 நாள்கள் ஆகியும் அவர்களை மீட்கும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. ராணுவம், கடற்படை கமாண்டோக்கள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவை சேர்ந்த 6 வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை தேடுவதற்காக அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மற்றும் எண்டோஸ்கோபி கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கைகுழந்தையுடன் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை..! சுட்டுப்பிடித்த போலிசார்… கோவில்பட்டியில் பரபரப்பு

மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த மோப்ப நாய்களும் மீட்பு பணியில் களமிறக்கப்பட்டுள்ளன. 8 தொழிலாளர்கள் உயிருடன் இருக்க மிக குறைவான வாய்ப்பே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீரை வெளியேற்றுவது மிகவும் சவாலாக உள்ளதாக நாகர்கர்னூல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் 44 கிலோ மீட்டர் நீளம் கொண்டது . இதற்காக தோண்டப்படும் சுரங்கத்தின் முகப்பிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. பக்க வாட்டில் ஏற்பட்ட உடைப்பினால் தண்ணீர் சுரங்கம் முழுவதும் நிரம்பியது. தண்ணீர் கலந்த மண் சுரங்கத்தில் 200 முதல் 300 மீட்டர் அளவில் பரவியுள்ளது. சுரங்கம், நிலத்தின் மேற்பரப்பிலிருந்து 500 அடி ஆளம் கொண்டது 200 மீட்டர் அளவிற்கு சுரங்கத்தின் மேற்கூரை சரிந்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல் இமாச்சல பிரதேசத்தில் 2022- ஆம் ஆண்டு, 1,245 மீட்டர் நீள சுரங்க கட்டுமான பணியின் போது விபத்து ஏற்பட்டது. சுரங்கத்தில் சிக்கியிருந்த 50 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 2023- ஆம் ஆண்டு, உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள் 16 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். கடந்த மாதம் அசாமில், உம்ராங்சோ நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இரண்டு நாள் போராட்டத்திற்கு பின்னர் 4 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை.

First Published :

February 25, 2025 10:16 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தெலங்கானா சுரங்க விபத்து: 8 தொழிலாளர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு.. வெளியான அதிர்ச்சி காரணம்!



.

Previous Post

மருத்துவத்தில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Next Post

மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை: ஞானேஷ்குமார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை: ஞானேஷ்குமார்

மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை: ஞானேஷ்குமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In