அதேபோல், நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பி.லிட்., பி.எட். பட்டப்படிப்புகளை படித்து முடித்ததற்காக வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை வழங்க தமிழக அரசு மறுக்கிறது. கற்பிக்கும் பாடம் தவிர்த்து பிற பாடங்களில் பட்டம் பெறுதல், நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட் பட்டம் பெறுதல், ஆசிரியர்களில் இளையோர் & முதியோர் இடையிலான ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பதவி உயர்வுக்கான ஊதியத்தை நிர்ணயித்தல், 1993&ஆம் ஆண்டின் சிறப்புப் படிகளை பெறுதல், கீழ்நிலை, மேல்நிலை பணிக்காலத்தை ஒருங்கிணைத்து தேர்வு நிலை, சிறப்பு நிலை தகுதிகளைப் பெறுதல், 2009&ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியாக பணியாற்றியதற்கான தேர்வுநிலை தர ஊதியம் பெறுதல் ஆகியவற்றை தணிக்கைத் தடையை காரணம் காட்டி தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
