Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தொடர்ந்து ஆசிரியர்கள் கைது: உ.பி, பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட்.. இப்ப மகாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2024
in Default
1
தொடர்ந்து ஆசிரியர்கள் கைது: உ.பி, பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட்.. இப்ப மகாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது..!
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மும்பை: நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மகாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை விவகாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நீட் முறைகேடு தொடர்பாக உ.பி, பீகார், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஏற்கனவே 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ந் தேதி நடைபெற்றது. இந்த நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியாகின. நீட் நுழைவைத் தேர்வை பல லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் 1563 பேருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கியது தேசியத் தேர்வு முகமை. இது மிகப் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் 1563 பேரின் நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டு இன்று மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.

Neet Neet exam

அத்துடன் பீகாரில் நீட் வினாத்தாள் விற்பனை விவகாரம் பேரலை சுனாமி போல விஸ்வரூபமாகிக் கொண்டே இருக்கிறது. உ.பி, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் என ஒவ்வொரு மாநிலமான இந்த முறைகேடு சங்கிலித் தொடர் நீள்கிறது. நீட் வினாத்தாள் விற்பனை முறைகேடுகள் தொடர்பாக மொத்தம் 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை நடத்துகிற தேசியத் தேர்வு முகமை தலைவரையும் நீக்கி இருக்கிறது. நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளைத் தடுக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பால் மருத்துவர்கள் விரக்தி.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

அதேபோல இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. 18-வது லோக்சபா கூட்டத் தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றும் போது ந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

இந்த நிலையில் நீட் வினாத்தாள் விற்பனை விவகாரம் மகாராஷ்டிராவையும் எட்டியிருக்கிறது. நீட் வினாத்தாள் விற்பனை உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2 ஆசிரியர்களை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous Post

TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பில் குளறுபடிகள்.. மாணவர்கள் வாழ்கை பாதிப்பு ..ராமதாஸ் வைத்த கோரிக்கை..!

Next Post

நீட் கேள்வித்தாள் லீக்கானது எப்படி? முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி? கலக்கத்தில் பெரும்புள்ளிகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நீட் கேள்வித்தாள் லீக்கானது எப்படி? முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி? கலக்கத்தில் பெரும்புள்ளிகள்

நீட் கேள்வித்தாள் லீக்கானது எப்படி? முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி? கலக்கத்தில் பெரும்புள்ளிகள்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In