ஜூன் 16-ம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கை முழுவதும் அ.தி.மு.க-வை மையமிட்டே இருக்கிறது. 2019-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடுகள் என குறிப்பிட்டு இருக்கிறார் அண்ணாமலை. அதேபோல, 2020-ல் பிரதமரின் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் தமிழ்நாட்டில் நடந்த முறைகேடு, 2018-ல் குரூப் 1 தேர்வு முறைகேடு, 2018-ல் மின்சார வாரியம் நிலக்கரி இறக்குமதி முறைகேடு, 2018-ல் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஏலம் என எந்த ஒரு ஆதரமும் இல்லாமல், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதை அப்படியே அண்ணாமலையும் வாசித்து இருக்கிறார்.
ஸ்டாலினை விமர்சிக்கவேண்டும் என்பது மட்டும் அண்ணாமலையும் நோக்கமாக இருந்தால், ஆதாரம் இல்லாமல் முறைகேடு என அ.தி.மு.க-வை பேசி இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், கடந்த கால அ.தி.மு.க ஆட்சியை களங்கப்படுத்த வேண்டுமென்றே தேவையில்லாமல் பேசி இருக்கிறார். ஏற்கனவே அம்மா குறித்து அண்ணாமலை பேசியதற்கு தொண்டர்கள் கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற ஓர் அறிக்கையை தவிர்த்து இருக்கவேண்டும். அல்லது முறைகேடு என்று குறிப்பிடாமல், புகாரென குறிப்பிட்டு தெளிவாக அறிக்கையை வெளியிட்டு இருக்கவேண்டும். அதிமுகவை சீண்டுவதை அண்ணாமலை இத்தோடு நிறுத்தவேண்டும்” என்றார் காட்டமாக…
இதுதொடர்பாக பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணனிடம் பேசினோம். “அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடர்ந்தால், பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வெளியான விவகாரம் முதல் இதுவரையிலும் அவர் தெளிவுப்படுத்த வேண்டும். பூட்டிய அறைக்குள் நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசிய இந்த கருத்தை, வெளியே அவர் மறுக்கவில்லை.

