மதுரையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் பெ.ஜான் பாண்டியனின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு வருடம் தோறும் சிறப்பாக அன்னதானம் நிகழ்ச்சி சுவர் விளம்பரம் வால் போஸ்டர் என அனைத்தையும் திறம்பட செய்து கொண்டிருக்கும் மாவட்ட இளைஞரணி செயலாளர் க.உ.ரஞ்சித் பாண்டியனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் அக்கட்சியினர்..

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தின் சார்பாக மேலூரில் உள்ள சி.எஸ்.ஐ ஊனமுற்றோர் பள்ளிக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிறுதூர் அ.சி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட தலைவர் கதிரேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கொட்டாம்பட்டி க.உ.ரஞ்சித் பாண்டியன், மேலூர் தொகுதி செயலாளர் ஆம்புலன்ஸ் ஹரி, கொட்டாம்பட்டி ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் முத்துப்பாண்டியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

