Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’நெய் வாங்கலனா பால் கட்! மிரட்டும் ஆவின் நிர்வாகம்!’…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 8, 2025
in அரசியல் செய்திகள்
1
’நெய் வாங்கலனா பால் கட்! மிரட்டும் ஆவின் நிர்வாகம்!’…
11
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆவின் உயரதிகாரிகளின் வாய்மொழி உத்தரவை வேதவாக்காக கருதி அப்படியே வட்டார அதிகாரிகள் செயல்படுத்தினால் இழப்பு ஏற்படப் போவது பால் முகவர்களுக்கு அல்ல, ஆவினுக்குத் தான் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரிக்கை செய்கிறது.

பால் பொருட்கள் வாங்காத பாலகங்களுக்கு ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்படுவதாக ஆவின் அதிகாரிகளுக்கு பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவினில் FRO எனப்படும் (Franchisees Retail Outlets) நேரடி வர்த்தக தொடர்பு ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்கள் பல நாட்களாக ஆவின் பால் பொருட்கள் வாங்கவில்லை என்பதை காரணம் காட்டி சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு ஆவின் பால் விநியோகத்தை நேற்று முதல் நிறுத்த வட்டார அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதோடு, குளிர்சாதன அறையில் அமர்ந்து கொண்டு உண்மையான கள நிலவரம் என்னவென்றே தெரியாமல் உத்தரவிடும் ஆவின் உயரதிகாரிகளின் வாய்மொழி உத்தரவை வேதவாக்காக கருதி அப்படியே வட்டார அதிகாரிகள் செயல்படுத்தினால் இழப்பு ஏற்படப் போவது பால் முகவர்களுக்கு அல்ல, ஆவினுக்குத் தான் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரிக்கை செய்கிறது.

பால் முகவர்கள் வயிற்றிலடித்து வருகின்றன

ஏனெனில் ஏற்கனவே ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து ரிலையன்ஸ் மார்ட், பிக் பஜார், டி மார்ட் உள்ளிட்ட கார்ப்பரேட் வணிக நிறுவனங்களுக்கும், ஸ்விக்கி, ஸொமோட்டோ உள்ளிட்ட இணைய வழி கார்ப்பரேட் வர்த்தக நிறுவனங்களுக்கும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் சார்ந்த உபபொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கி வருவதால் மேற்கண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் ஆவின் பால் பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட மிக குறைவான விலைக்கு விற்பனை செய்து பால் முகவர்கள் வயிற்றிலடித்து வருகின்றன.

பால் முகவர்கள் தவிர்க்கும் சூழல்

பால் முகவர்களை விட கார்ப்பரேட் வணிக நிறுவனங்களில் மிகக் குறைந்த விலைக்கு ஆவின் பால் பொருட்கள் கிடைப்பதால் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் ஆவின் பாலினை தவிர அனைத்து வகையான பால் பொருட்களையும் மேற்கண்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்தே வாங்கிக் கொள்கின்றனர். இதன் காரணமாக பால் முகவர்கள் நடத்தும் ஆவின் பாலகங்களில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைவதால் வேறுவழியின்றி ஆவின் பால் பொருட்கள் வாங்குவதை பால் முகவர்கள் தவிர்க்கும் சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி அவ்வாறு தேக்கமடையும் ஆவின் பால் பொருட்கள் விரைவில் காலாவதியாகி விடுவதால் காலாவதியான பால் பொருட்களையும் ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து பால் முகவர்களுக்கு மாற்றி தருவதில்லை. இதனாலும் பால் முகவர்கள் பெரும் நிதியிழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு ஆவின் பால் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து ஆவின் பாலினை மட்டும் பால் முகவர்கள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பால் பொருட்கள் வாங்காத பால் முகவர்களுக்கு ஆவின் பால் விநியோகத்தை நிறுத்தினால் பால் முகவர்கள் பயந்து கொண்டு உடனடியாக ஆவின் பால் பொருட்களை வாங்கி தங்களின் பாலகங்களில் குவித்து விடுவார்கள் என்பது ஆவின் அதிகாரிகளின் எண்ணமாக இருக்கிறது. இது “பூனை தன் கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருள் சூழ்ந்ததாகி விடும் என நினைப்பதைப் போல உள்ளது”.

வருமானத்திலும் மிகப்பெரிய இழப்பு ஏற்படும்

மேலும் ஆவின் நிர்வாகத்தின் தவறான இந்த செயல்பாடுகளால் பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்வதில் இடையூறு ஏற்பட்டு ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு உருவாகி அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தான் அவப்பெயர் ஏற்படுமே தவிர பால் முகவர்களுக்கு அல்ல, அத்துடன் பால் முகவர்களும் வருமானமே இல்லாத ஆவின் பாலினை தினசரி விற்பனை செய்து நஷ்டமடைவதை காட்டிலும் உழைப்பிற்கேற்ற வருமானத்தை ஓரளவிற்கேனும் தந்து கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனைக்கு தங்களை எளிதாக மாற்றிக் கொள்வர், இதனால் பால் முகவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்து அவர்களின் வாழ்வாதாரம் வளமடையுமே தவிர இழப்பு ஏற்படப் போவதில்லை. அதே சமயம் ஆவின் அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளால் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஆவினுக்கான பால் விற்பனை சரிவடைந்து பால் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்திலும் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை ஆவின் நிர்வாகம் உணர்ந்து பால் முகவர்களுக்குள்ள நடைமுறை சிக்கல் என்ன என்பதை அலசி ஆராய்ந்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எச்சரிக்கிறோம்

அதை விடுத்து பால் பொருட்கள் வாங்காத பாலகங்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்வதை நிறுத்துவது என்பது “தூக்கம் விற்று கட்டில் வாங்க ஆசைப்படுவதற்கு சமம்” என்பதால் அது போன்ற முட்டாள்தனத்தை ஆவின் அதிகாரிகள் மேற்கொண்டு தொடர்ச்சியாக கடைபிடிப்பது ஆவினின் அழிவிற்கே வழிவகுக்கும் அன்றி வளர்ச்சிக்கு அல்ல என்பதை ஆவின் நிர்வாகம் கவனத்தில் கொண்டு இதுவரை ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள FRO (Franchisees Retail Outlets) எனப்படும் பாலகங்களுக்கு வழக்கமான ஆவின் பால் விநியோகத்தை தொடர உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் அல்லது அவ்வாறான ஆவின் பாலகங்களை தனியார் நிறுவனங்களின் பாலகங்களாக மாற்றும் முயற்சியை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மேற்கொள்ளும் என்பதை ஆவின் நிர்வாகத்திற்கு கனிவுடன் எச்சரிக்கை செய்கிறோம்.

.

Previous Post

’எந்த கட்சியின் கூட்டணிக்காகவும் அதிமுக தவம் கிடந்த சரித்திரம் கிடையாது’ அண்ணாமலைக்கு ஈபிஎஸ் பதிலடி!

Next Post

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை…

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை...

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In