Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து… தமிழக அரசு அதிரடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து… தமிழக அரசு அதிரடி!
20
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மேல்மா சிப்காட்டின் 3-வது திட்ட விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி அருள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அருள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை அரசு ரத்து செய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள மேல்மா சிப்காட்டின் மூன்றாவது திட்ட விரிவாக்கப் பணிக்களுக்காக 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. இது தொடர்பாக அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 11 வழக்குகள் அடிப்படையில் அருள் என்பவர் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேல்மா கூட்ரோடு பகுதி

மேல்மா கூட்ரோடு பகுதி

இவர்களில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அருள் தவிர மற்ற 6 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், தனது கணவர் அருள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி அருளின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்

இதுதொடர்பாக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், “குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள அருள், தீவிர குற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. மக்களை தூண்டிவிட்டதாகவும், நிலம் அளிக்க முன்வரும் மக்களை தடுத்தார் என்றும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

100 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்த நிலையில் அருள் மீது உள்நோக்கத்தோடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கருதுகிறோம்” என தங்களுடைய கருத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில், விவசாயி அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.

Previous Post

எலெக்ட்ரிக் பைக் தீ விபத்து – 10 வாகனங்கள் எரிந்து நாசம்.

Next Post

“நீ மாத்திரை கொடுத்து எங்க ஆளுக வாழனுமா?” – மதுரையில் தொடரும் சாதிய கொடுமைகள்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“நீ மாத்திரை கொடுத்து எங்க ஆளுக வாழனுமா?” – மதுரையில் தொடரும் சாதிய கொடுமைகள்.

“நீ மாத்திரை கொடுத்து எங்க ஆளுக வாழனுமா?” - மதுரையில் தொடரும் சாதிய கொடுமைகள்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    உயர் நீதிமன்றம் தலையிட்ட தன் பேரிலேயே தமிழக அரசு விவசாயி அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது எனவே இதற்கு காரணம் உயர் நீதிமன்றமே அதாவது சென்னை உயர் நீதிமன்றமே நீதிமன்றத்தின் தலையீடு பாராட்டப்பட வேண்டியது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In