Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆபரேஷன் விஜய் – 1971 | நாடக உருவாக்க நிகழ்வை துவக்கி வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 1, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆபரேஷன் விஜய் - 1971 | நாடக உருவாக்க நிகழ்வை துவக்கி வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
11
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: 1971-ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய – பாகிஸ்தான் போரின் வீரக் கதையை எடுத்துச் சொல்லும் வகையில், ‘ஆபரேஷன் விஜய் – 1971’ நாடக உருவாக்க நிகழ்வு நடைபெற்றது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார்.

சென்னை வேளச்சேரியில் ‘ஆபரேஷன் விஜய் – 1971’நாடக உருவாக்க நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவங்கி வைத்தார். சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சியாக ‘ஆபரேஷன் விஜய் – 1971’ என்ற நாடக உருவாக்கம் நிகழ்வை என்சிசி உடான் அமைப்பு நடத்தியது. NCC UDAAN என்பது தேசிய மாணவர் படையின் ஒன்றுபட்ட, முன்னாள் மாணவர் சங்கத்தின் ஓர் அமைப்பாகும். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு நிகழ்வை துவங்கி வைத்து, போரில் கலந்து கொண்ட நபர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வு 1971-ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய – பாகிஸ்தான் போரின் வீரக் கதையை குறிப்பிடுகிறது. இந்திய ராணுவத்தின் வெற்றி குறித்து அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் ஒருகதையை உருவாக்கி அதை மீண்டும் நாடகமாக காட்சிப்படுத்துவதன் மூலமாக தேசபக்தி, ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதையே, இந்த நிகழ்வு நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த நாடக உருவாக்கம், இந்திய-பாகிஸ்தான் போரின்போது நமது ஆயுதப் படைகளின் வீரம், தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஆயுதப் படைகள், துணை ராணுவ அமைப்பின் அதிகாரிகள், மாநில நிர்வாகத்தின் தலைவர்கள், தமிழ்நாடு காவல்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

.

Tags: ஆபரஷனஆர.என.ரவஆளநரஉரவககதமழகதவககநகழவநடகவததரவஜய
Previous Post

”இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” – திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Next Post

மொழி என்பது வெளிப்பாட்டின் கருவி: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மொழி என்பது வெளிப்பாட்டின் கருவி: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

மொழி என்பது வெளிப்பாட்டின் கருவி: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In