அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஊழல் வழக்கு விசாரணையின் கோப்புகளை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை எனவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்கான இசைவாணையே தமிழ்நாடு அரசு கோரவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்த நிலையில், அந்த கோப்புகளை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டுகள் வெளியாகியுள்ளன “கோப்பை பெற்றுக்கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டுவிட்டு அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று கூறியிருந்தார்


