ஒன்றிய அரசிடம் இருந்து உதவிகள் இல்லை
ஒன்றிய அரசிடம் இருந்து நமக்கு வர வேண்டிய பல நலத்திட்ட உதவிகள் வராமலேயே 41 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறையை குறைத்து உள்ளோம். மூலதன செலவினம் 46 ஆயிரம் கோடியாகவும், அடுத்த வருடம் 57 ஆயிரம் கோடியாகவும் இருக்கும். வருவாயை பொறுத்தவரை 75 சதவீதம் சொந்த வரிவருவாயையும், 24.7 சதவீதம் ஒன்றிய அரசின் வரிப்பகிர்வு அல்லது மானிய உதவிகளை பெற்று வருகிறோம். இதில் சில குறைவுகள் உள்ளது.
