Last Updated:
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியில், மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை மாதம் 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை நியாயமாக விசாரிக்கவில்லை, எனவே கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
மேலும், தமிழ்நாடு காவல்துறை வசம் உள்ள விசாரணை ஆவணங்களை உடனடியாக சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை விசாரித்து 6 மாதங்களில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
October 06, 2025 5:12 PM IST

