அமைச்சர் ஆய்வு
இதைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு தலைமைச்செயலகத்தின் முதல் தளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ. வேலு, ‘பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை கடந்த 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டு தொடங்கப்பட்ட ஒரு மாளிகை. இதில் தான் தலைமை செயலகத்தின் முழு அலுவலகங்களும் இருக்கிறது. இதில் முதல் தளத்தில் விவசாயத்துறை செயல்பட்டு வருகிறது. திடீரென விரிசல் ஏற்பட்டது என்ற ஒரு பீதி அலுவலகத்தில் ஏற்பட்டதன் அடிப்படையில் அலுவலகத்தில் பணியாற்றிய அனைவரும் கீழ் தளத்திற்கு வந்து விட்டனர். அலுவலகத்தில் இருந்த எனக்கு தகவல் தெரிந்த உடனே பொறியாளர்களை வைத்து பார்த்தோம். கட்டிடத்தின் உறுதி தன்மை எந்த காரணத்தை கொண்டு உறு குலையவில்லை. அது உறுதியாகவே இருக்கிறது.
