இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “2026-ல் அமையப்போவது கூட்டணி ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். அது பா.ஜ.க ஆட்சி என்றே சொல்வேன். வரும் தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பவன் நான்” என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் கூட்டணி குறித்து, “”பேசவேண்டிய நேரத்தில் மீசையை முறுக்கிப் பேசுவேன்’ என்று திருமாவளவன் பேசியிருந்தார்.

இது குறித்துப் பேசியிருக்கும் அண்ணாமலை, “விஜய்யின் த.வெ.க கட்சியானது, மத்தியில் பா.ஜ.க, மாநிலத்தில் தி.மு.க எதிரி என அறிவித்திருக்கிறது. த.வெ.க-வில் இனிதான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைத் தொடங்கப்போகிறது.
கூட்டணி வரும்போதுதான் அந்தந்தக் கட்சியின் கொள்கை பற்றித் தெரிய வரும். பா.ம.க கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
இப்போதைக்கு தி.மு.க கூட்டணிதான் கொஞ்சம் குளறுபடியில் இருக்கிறது. அண்ணன் திருமாவளவன் அவர்கள் ‘பேசவேண்டிய நேரத்தில் மீசையை முறுக்கிப் பேசுவேன்’ என்று கூறியிருக்கிறார்.
அவர் எப்போ பேசப்போகிறார் என்பதைப் பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம்” என்று விமர்சித்திருக்கிறார்.
சீமானின் கள் இறக்கும் போராட்டம் குறித்து, “கள் இறக்கும் போராட்டத்திற்கு எங்களின் முழு ஆதரவு இருக்கிறது. தடையை உடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தடையை மீறச் செய்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. சட்டப்படி நின்று தடையை நீக்கப் போராட்டம் செய்வதே எங்களின் நோக்கம்” என்று பேசியிருக்கிறார்.
