வேளாண்மை துறை அமைச்சருக்கு திரு.செந்தில் வேலன் கௌரவத் தலைவர் சென்னை மண்டலம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது..
வேளாண்மை துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை துறை செயலாளர், வேளாண்மை துறை இயக்குனர், தோட்டக்கலைத் துறை இயக்குனர் ஆகியோருக்கு எனது இனிய காலை வணக்கம். தற்பொழுது பெய்து முடிந்துள்ள மிக்ஸாம் புயல் கனமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
ஆற்றங்கரை உடைந்தும் ஏரிக்கரைகள் உடைந்தும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு வர இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அந்த பயிர் சேத விவரங்களை உடனடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தர மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மற்றும் அந்தந்த வட்டார உதவி இயக்குனர்கள் வேளாண் உதவி அலுவலர்கள் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை விரைந்து, சேத விவரங்களை புகைப்படம் எடுத்தும் விவசாயிகளிடம் ஆவணங்களை பெற்று அரசுக்கு அனுப்ப ஏதுவாக விரைந்து செயல்பட வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இது கோரிக்கை அல்ல வேண்டுகோள். விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவன் கே செந்தில் வேலன் கௌரவத் தலைவர் சென்னை மண்டலம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு என்று எழுதியிருந்தார்.

