March 20, 20258:26 AM IST
Tamil Live Breaking News: 13 மீனவர்கள் நாடு திரும்பினர்
மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கடந்த ஜனவரி 27ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை கடற்படை கைது செய்த 13 மீனவர்களை நீதிமன்றம் விடுதலை செய்ததை அடுத்து, அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துக் வரப்பட்டனர்.
மேலும் இலங்கை கடற்படை சுட்டதில் காலில் காயம் அடைந்த காரைக்கால் மீனவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
