Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil Live Breaking News : திருவண்ணாமலை கோயிலில் மலையேற அனுமதியா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 10, 2024
in அரசியல் செய்திகள்
0
Tamil Live Breaking News : திருவண்ணாமலை கோயிலில் மலையேற அனுமதியா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram




December 10, 2024, 7:13 am IST

Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை

December 10, 2024, 1:05 pm IST

Tamil Live Breaking News : “குறைந்த நாட்களே பேரவைக் கூட்டம் நடந்துள்ளது”

குறைந்த நாட்களே சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. மக்கள் பிரச்னையை எப்படி அரசின் கவனத்திற்கு கொண்டு வர முடியும்? திமுக தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் பேரவைக் கூட்டம் என்று கூறியிருந்தீர்கள். அப்படி பார்த்தால் 400 நாட்கள் நடந்திருக்க வேண்டும்; ஆனால் 119 நாட்கள் தான் நடந்துள்ளது என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

December 10, 2024, 1:01 pm IST

Tamil Live Breaking News : அதிகாரிகளை தடுத்த விவகாரம்: “கேரளாவுடன் பேசுவோம்”

“முல்லை பெரியாறு அணை பராமரிப்பிற்கு பொருட்கள் கொண்டு சென்ற அதிகாரிகள் தடுக்கப்பட்டது குறித்து கேரள அதிகாரிகளிடம் பேசுவோம்” என அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.

நாளை (டிச.11) கேரளா செல்லும் முதல்வர் இவ்விவகாரம் குறித்து பேச வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய நிலையில், ”நானும் கேரளா செல்கிறேன். இது குறித்து கேரள அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என  அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

விளம்பரம்
December 10, 2024, 1:00 pm IST

Tamil Live Breaking News : சாத்தனூர் அணை – முதலமைச்சர் விளக்கம்

“5 முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, படிப்படியாகத்தான் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது” என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.

December 10, 2024, 12:57 pm IST

Tamil Live Breaking News : வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

December 10, 2024, 12:37 pm IST

Tamil Live Breaking News : வலுவடைந்தது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

விளம்பரம்
December 10, 2024, 12:36 pm IST

Tamil Live Breaking News : அதானி விவகாரம்: பாமக வெளிநடப்பு

அதானி விவகாரத்தில் முதலமைச்சர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை எனக் கூறி சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு.

அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எந்த தொடர்புமில்லை என பதில் அளித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

December 10, 2024, 12:33 pm IST

Tamil Live Breaking News : அதானி என்னை சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை – முதல்வர் விளக்கம்

“அதானி என்னை சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை” என  சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

December 10, 2024, 12:11 pm IST

Tamil Live Breaking News : அதானி சந்திப்பு விவகாரம் : முதலமைச்சர் விளக்கம்

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை என முதலமைச்சர் பேரவையில் தெரிவித்தார்.

விளம்பரம்
December 10, 2024, 11:58 am IST

Tamil Live Breaking News : அதானி மீதான விசாரணையை ஆதரிப்பீர்களா?: முதல்வர் கேள்வி

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென ‘இந்தியா’ கூட்டணி வலுயுறுத்துகிறது; திமுகவை குறை சொல்லும் பாஜக, பாமக இந்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக இருக்கிறதா? என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

December 10, 2024, 11:38 am IST

Tamil Live Breaking News : திருவண்ணாமலை: 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு.

விடுமுறையை ஈடு செய்யும் வகையில், அதற்கு பதில் 21 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக பள்ளி செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

December 10, 2024, 11:16 am IST

Tamil Live Breaking News : திருவண்ணாமலை கோயிலில் மலையேற அனுமதியா? – அமைச்சர் சேகர் பாபு பதில்

திருவண்ணாமலை தீபத்திற்கு இந்த ஆண்டு 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சங்க காலத்தில் இருந்து திருவிழா நடந்து வருவது வழக்கத்தில் இருக்கும் ஒன்று. இதுகுறித்து தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர் அமைச்சர்கள் தொடர் கூட்டங்கள் நடத்தியுள்ளனர்.

சரவணராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டு 3 நாள் ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனித சக்திகளை பயன்படுத்தி, சான்றோர்களால் தொடங்கப்பட்ட இந்த கார்த்திகை தீபம் இந்த ஆண்டும் மலையின் உச்சியின் மேல் எரியும். அதற்கு எவ்வளவு மனித சக்திகளை பயன்படுத்தி எடுத்துச் செல்ல வேண்டுமோ எடுத்து செல்லப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு உறுதி.

விளம்பரம்
December 10, 2024, 11:08 am IST

Tamil Live Breaking News : மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் குட் நியூஸ்

மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நிதித்துறையின் அனுமதியை கோரியுள்ளோம். அனுமதி கிடைக்கும்பட்சத்தில் தேவைக்கேற்ப காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தகவல் அளித்துள்ளார்.

December 10, 2024, 10:21 am IST

Tamil Live Breaking News: ஜனவரிக்குள் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் – அமைச்சர் கே.என் நேரு உறுதி

திருவையாறு தொகுதி திருவையாறு, பூதலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 54 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் நிறைவடைந்து ஜனவரி 2025க்குள் செயல்பாட்டிற்கு வரும் என நகராட்சி நிர்வாக்த்துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்தார்.

December 10, 2024, 10:19 am IST

Tamil Live Breaking News: 1000 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன் தகவல்

இதுவரை 500 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. வரும் ஆண்டு 1000 தடுப்பணைகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
December 10, 2024, 8:49 am IST

Tamil Live Breaking News : குரூப்-1 முதன்மைத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சார் ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு இன்று தொடங்குகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு இன்று(டிச.10) தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது; சார் ஆட்சியர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது; முதல்நிலை தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதன்மை தேர்வை 1,888 பேர் எழுதுகின்றனர்.

December 10, 2024, 8:32 am IST

Tamil Live Breaking News : காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைவதில் தாமதம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைவதில் தொடர்ந்து தாமதம் நீடிப்பதாக வானிலை மையம் தகவல்.

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

December 10, 2024, 8:30 am IST

Tamil Live Breaking News : டங்ஸ்டன் விவகாரம் – கனிமொழி நோட்டீஸ்

டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாக்கூரும் நோட்டீஸ் அளித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக் கோரி நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
December 10, 2024, 8:29 am IST

Tamil Live Breaking News : “ஆதவ் மனம் மாறுவாரா? அல்லது திருமா அணி மாறுவாரா?”

“ஆதவ் அர்ஜுன் ஆறு மாதத்திற்கு இடைநீக்கம் என அண்ணன் திருமா அறிவிப்பு; ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா? அல்லது திருமா அணி மாறுவாரா?” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

December 10, 2024, 7:54 am IST

Tamil Live Breaking News : அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை – வானிலை மையம்

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

December 10, 2024, 7:28 am IST

Tamil Live Breaking News : மாயமான சிறுவன் – சடலமாக மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியில் நேற்று காலை கருப்பசாமி என்ற சிறுவன் காணமால் போன நிலையில், இன்று காலை பக்கத்து வீட்டு மாடியில் மூச்சு பேச்சு இல்லாத நிலையில் மயக்கம் அடைந்து கிடந்துள்ளார். சிறுவனை மீட்டு, சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, சிறுவன் உயிரிழந்து பல மணி நேரம் இருக்கலாம் என சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
December 10, 2024, 7:16 am IST

Tamil Live Breaking News : மயிலாப்பூரில் பறக்கும் ரயில் மேம்பாலத்தில் ஒருவர் கொலை

சென்னை மயிலாப்பூரில் பறக்கும் ரயில் மேம்பாலத்தில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த லூயிஸ் பத்தியாஸ் (40) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்ட போது படுகாயமடைந்து லூயிஸ் உயிரிழப்பு: கொலை சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணை

December 10, 2024, 7:14 am IST

Tamil Live Breaking News : திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார்

கோவை ராமநாதபுரம் சுங்கம், கருணாநிதி நகரில் வசித்து வந்த திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

1980 ம் ஆண்டு கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1989 ஆம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் இரா.மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

December 10, 2024, 7:12 am IST

Tamil Live Breaking News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

விளம்பரம்
  • First Published : December 10, 2024, 7:05 am IST



.

Previous Post

மதுரையில் விசிக கொடியேற்றம் எதிரொலி! வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Next Post

பிரேஸில் அதிபருக்கு மூளை அறுவைச்சிகிச்சை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரேஸில் அதிபருக்கு மூளை அறுவைச்சிகிச்சை

பிரேஸில் அதிபருக்கு மூளை அறுவைச்சிகிச்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In