Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil Live Breaking News: தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை அலெர்ட் – எங்கெல்லாம் தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2024
in அரசியல் செய்திகள்
0
Tamil Live Breaking News: தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை அலெர்ட் – எங்கெல்லாம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



June 18, 2024, 1:53 pm IST

ஜூன் 22 ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

வரும் 22 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

June 18, 2024, 12:54 pm IST

மாம்பழம் சின்ன ஒதுக்கக்கோரி பாமக இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதம்

மாநிலக் கட்சி அந்தஸ்தை பாமக இழந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென பாமக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

June 18, 2024, 12:45 pm IST

ரேஷன் பொருட்கள்-தட்டுப்பாடு : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்று வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

பொது விநியோகத்தில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ரேஷன் கடைகளில்…

— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 18, 2024

விளம்பரம்
June 18, 2024, 12:20 pm IST

வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்த ராகுல்காந்தி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றிபெற்றார்.இதனைதொடர்ந்து இரண்டில் ஒரு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், வயநாடு  எம்பி பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

June 18, 2024, 11:22 am IST

நாளை இரவும் இருக்கு… இந்த 4 மாவட்டங்களுக்கு அலெர்ட் கொடுத்த வெதர்மேன்

Very high intense storms are knocking Chennai doors. It has taken almost 3 hours to come from Rayalseema. Unlike yesterday, today the storms are gaining strength and big gust front is seen. So it will be very windy.

Tomorrow night too we can see intense storms like this in KTCC. pic.twitter.com/rf3y5Tz7Qi

— Tamil Nadu Weatherman (@praddy06) June 17, 2024

June 18, 2024, 11:10 am IST

இன்று அறிமுகமாகும் கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி மொபைல் ஆப்’

ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட 9 இந்திய பிராந்திய மொழிகளில் கிடைக்கும் ஜெமினி மொபைல் செயலியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தவிருப்பதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

Exciting news! 🇮🇳 Today, we’re launching the Gemini mobile app in India, available in English and 9 Indian languages. We’re also adding these local languages to Gemini Advanced, plus other new features, and launching Gemini in Google Messages in English. https://t.co/mkdSPZN5lE

— Sundar Pichai (@sundarpichai) June 18, 2024

விளம்பரம்
June 18, 2024, 11:09 am IST

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக, பாமக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

June 18, 2024, 10:55 am IST

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை ஜூலை 22ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. அதேபோல முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கின் விசாரணை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

June 18, 2024, 10:55 am IST

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை – தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை எனவும் யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய்யின் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை எந்த தேர்தலிலும் போட்டியில்லை என திட்டவட்டமாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thalaivar @actorvijay Sir.!@tvkvijayhq @TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/vwy8VCLjwS

— N Anand (@BussyAnand) June 18, 2024

விளம்பரம்
June 18, 2024, 10:55 am IST

பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அவசர ஆலோசனை

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். சென்னை கோயம்பேடு தனியார் ஓட்டலில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

June 18, 2024, 10:55 am IST

வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை

வெளிமாநில பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், கூடுதல அவகாசம் வழங்கும் திட்டம் இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் திட்டமிட்டபடி வெளி மாநில பேருந்துகள் இன்று முதல் தடை விதிக்கப்படும் எனவும் தடையை  மீறி  இயக்கினால் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

June 18, 2024, 10:55 am IST

பிரபல தொழிலதிபர் கடத்தல் : சென்னையில் பரபரப்பு

சென்னை மதுரவாயல் மதுர நாயகன் தெரு பகுதியில் தூத்துக்குடியில் இருந்து வந்து உறவினர் வீட்டில் தங்கி இருந்த ஹர்ஷவர்தன் என்ற தொழிலதிபரை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரகு மற்றும் அவர் நண்பர் இருவரும் சேர்ந்து காரில் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அர்சவர்தனை இருவரும் கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

விளம்பரம்
June 18, 2024, 10:55 am IST

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமனம்

மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம் விடுவித்து புதிய மாவட்ட பொறுப்பாளராக சேகர் நியமனம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியை விரிவாக வாசிக்க

June 18, 2024, 10:55 am IST

மேட்டூர் அணை நிலவரம்

சேலம் மேட்டூர் அணையில் காலை 8 மணி நிலவரம்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் : 42.39 அடியிலிருந்து 42.15 அடியாக குறைவு

நீர்இருப்பு : 13.22 டிஎம்சி

நீர் வரத்து :
வினாடிக்கு 114 கன அடி

நீர் வெளியேற்றம் : விநாடிக்கு 1,500 கன அடி

June 18, 2024, 10:55 am IST

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பார்த்திபன் முரளி சாரதி ராமதாஸ் ஆகிய நான்கு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு விசைப்படகுடன் நான்கு பேரை கைது செய்தனர். இதையடுத்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.

விளம்பரம்
June 18, 2024, 10:55 am IST

சென்னை மழை எதிரொலி : விமான சேவை பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. 7 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தத்தளித்தன. அதில் ஒரு விமானம், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அதை போல சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்கள், தாமதமாகியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

June 18, 2024, 10:55 am IST

சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அந்தவகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு 2 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், போரூர், ராமாவரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

  • First Published : June 18, 2024, 7:05 am IST





.

Previous Post

Reliance Jio down: ‘ஜியோ இன்டர்நெட் வேலை செய்யல’-ஆயிரக்கணக்கான பயனர்கள் சமூக ஊடகங்களில் புகார்

Next Post

Archaeology Excavation: கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள்: முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Archaeology Excavation: கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள்: முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைப்பு

Archaeology Excavation: கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள்: முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In