Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை
தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
Tamil Live Breaking News : சுதந்திர தின விழா – சென்னையில் 9000 போலிசார் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னை பெருநகரில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தின விழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tamil Live Breaking News : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
Tamil Live Breaking News : ’போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ உறுதிமொழி
‘போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார்.
Tamil Live Breaking News : தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரண தங்கம் கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்து 6470 ரூபாய்க்கும் சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 51760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 50 காசுகல் குறைந்து 87.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tamil Live Breaking News : சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு
சிபிஐ கைது செய்ததற்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையை தொடர்ந்து சிபிஐயும் கெஜ்ரிவாலை கைது செய்தது. சிபிஐ கைது செய்ததை ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே மறுத்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
Tamil Live Breaking News : 7% வரை சரிந்த அதானி நிறுவன பங்குகள்
அதானி குழுமத்தின் போலி நிறுவனங்களில் செபி தலைவர் முதலீடு என ஹிண்ரென்பர்க் நிறுவனம் அளித்த நிலையில், அதானி நிறுவன பங்குகள் 7% வரை சரிந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறி,யீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 150 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tamil Live Breaking News : ஹிண்டன்பர்க் சர்ச்சை – சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகளுக்கும், சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கும் சரிந்துள்ளது.
செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன.
Tamil Live Breaking News : சென்னை கார் பந்தயத்தை ரத்து செய்க – ஓபிஎஸ்
மக்கள் பல இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிற சூழலில் கார் பந்தயம் நடத்துவது ஏற்கத்தக்கதில்லை. கார் பந்தயம் நடத்துவதால் பொதுமக்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. சென்னையில் கார் பந்தயம் நடத்துவதை அரசு ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து.
Tamil Live Breaking News : பிகார்: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி
பிகார் ஜெகனபாத் மாவட்டத்தில் மக்தும்பூர் பாபா சித்நாத் கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் பலி.
Tamil Live Breaking News : மேட்டூர் அணையின் நீர்திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் நீர் திறப்பு 21,500 கன அடியிலிருந்து 26,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 4,500 கன அடி விதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Tamil Live Breaking News : இன்று 9 மாவட்டங்களில் மழை – வானிலை மையம்
இன்று மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
- First Published :
