
Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை
Tamil Live Breaking News: அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு
மக்களவை தொடங்கியதும் எதிர்கட்சியினர் அமளி செய்ததால், பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
Tamil Live Breaking News: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், பாஜக போராட்டம்
அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சையாக பேசியதாக கூறி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் போராடி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பாஜக போராடி வருகிறார்கள். இந்த நிலையில், இரு கட்சி எம்.பிகளுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.
Tamil Live Breaking News: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு – தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுக்களை ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Live Breaking News: தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு
இன்று (19.12.2024) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.65 குறைந்து ரூ.7,070க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.520 குறைந்து ரூ.56,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil Live Breaking News: அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங். நோட்டீஸ்
அம்பேத்கர் குறித்த சர்ச்சைப்பேச்சு காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும். அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
Tamil Live Breaking News: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த முடிவை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கட்சி சின்னம் தொடர்பாக அனைத்து தரப்பினர் கருத்தைக் கேட்டு முடிவு எடுக்கும்படி ஏற்கனவே தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நேரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
Tamil Live Breaking News: புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ள ரஷ்யா
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
Tamil Live Breaking News: குற்றாலம் மெயின் அருவியில் அனுமதி
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Live Breaking News: பெட்ரோல் குண்டு: 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது
நெல்லை புதுக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகவரி கேட்டபோது, தெரியவில்லை எனக்கூறியதால் மைதீன் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
Tamil Live Breaking News: காங்கிரஸ் எம்.பி.களுக்கு எக்ஸ் நிறுவனம் நோட்டீஸ்
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி.களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ். மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திடம் இருந்து எக்ஸ் நிறுனவத்திற்கு நோட்டீஸ் வந்ததை அடுத்து எம்.பி.களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்.
Tamil Live Breaking News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
- First Published :
