சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் திரையரங்குகளில் டிக்கெட் வழங்கும் முறையை அரசே கணினி மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக வலைதளங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் “ONLINE TICKET’ விற்பனை கணக்கு வழக்குகளை, சம்பந்தப்பட்ட திரையரங்கினர், மறைத்து, அவர்கள் வேறு ஒரு கணக்கினை தவறாக காட்டியிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

இது சம்பந்தமாக விசாரணை செய்ததில் பல்வேறு திரைப்படங்களுக்கும் இதேபோல் கணக்கு வழக்குகளை மாற்றி தவறான தகவல்களை மட்டுமே அளித்துள்ளார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
