Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மற்ற ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம்… காதலியை கொன்று நாடகமாடிய காதலன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 7, 2025
in அரசியல் செய்திகள்
0
மற்ற ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம்… காதலியை கொன்று நாடகமாடிய காதலன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 04, 2025 3:03 PM IST

டெல்லியில், அர்ஷ்கிரித் சிங் என்பவர், மற்ற ஆண்களுடன் பேசியதால் காதலியை கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை கொன்ற காதலன்காதலியை கொன்ற காதலன்
காதலியை கொன்ற காதலன்

டெல்லியில், மற்ற ஆண்களிடம் பேசியதால் ஆத்திரம் அடைந்த காதலன், காதலியை கத்தியால் குத்திய கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி மெஹ்ரெளவி பகுதியைச் சேர்ந்தவர் அந்த 18 வயது இளம்பெண். பி.காம் படித்து வந்த இவருக்கு பார்ட்டி ஒன்றில் அர்ஷ்கிரித் சிங் என்பவர் அறிமுகமாகியுள்ளார். சிங்கும் பி.காம் படித்து வந்த நிலையில், இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இந்நிலையில் மாணவி கல்லூரிக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மாணவியின் தாயாருக்கு, அர்ஷ்கிரித் சிங்கின் தந்தை போன் செய்து எனது மகன் உங்கள் மகளால் தாக்கப்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். உடனே மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்று சிங்கிடம் தங்களது மகள் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு உங்களது மகள் என்னைக் கத்தியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே மாணவியை சிங் துன்புறுத்தி வந்தது பெற்றோருக்குத் தெரியும் என்பதால் இதுகுறித்து காவல்நிலையத்தில் கடத்தல் புகார் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் சிங்கை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதில் மாணவி மற்ற ஆண் நண்பர்களுடன் பேசுவதை விரும்பாத சிங் அவரை அடிக்கடி அதுகுறித்து எச்சரித்து துன்புறுத்தியிருக்கிறார்.

ஆனால் மாணவி நண்பர்களுடன் இயல்பாக பேசி வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சிங் அவரை டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இதனால் 6 மாதங்களுக்கு முன் மாணவி சிங்குடன் பிரேக்அப் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் மாணவியின் வீட்டிற்கே சென்று சிங் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து சிங்கின் பெற்றோரிடம் மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தபோது, அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவங்களால் ஆத்திரத்தில் இருந்த அர்ஷ்கிரித் சிங் இதற்கு சரியான நேரம் பார்த்து காத்திருந்தார். அதன்படி, மாணவியை தனியாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்தததாக அர்ஷ்கிரித் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு மாணவியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  மாணவியைக் கத்தியால் குத்தியபோதுதான் சிங்கிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

அவர் கொடுத்த தகவலின்பேரில் மாணவியின் உடலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். திட்டமிட்டு இந்த கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காதலனால் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

June 04, 2025 3:03 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மற்ற ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம்… காதலியை கொன்று நாடகமாடிய காதலன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!



.

Previous Post

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! – ஆா்பிஐ அனுமதி

Next Post

மாநிலங்களவை வேட்பாளா்களின் சொத்து விவரம்! கமலுக்கு எவ்வளவு தெரியுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாநிலங்களவை வேட்பாளா்களின் சொத்து விவரம்! கமலுக்கு எவ்வளவு தெரியுமா?

மாநிலங்களவை வேட்பாளா்களின் சொத்து விவரம்! கமலுக்கு எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In