Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருமாவுடன் அண்ணாமலை கூட்டு சதி.. போட்டு உடைத்த தடா பெரியசாமி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 30, 2024
in Default
1
திருமாவுடன் அண்ணாமலை கூட்டு சதி.. போட்டு உடைத்த தடா பெரியசாமி..
84
SHARES
135
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழக பாஜக பட்டியலின அணியின் மாநிலத் தலைவர் தடா பெரியசாமி இன்று காலை கட்சியிலிருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவனுக்கு எதிராக தடா பெரியசாமி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கார்த்தியாயினி என்ற பெண்வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியில் இருந்த தடா பெரியசாமி இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து சென்னை பசுமைவழிச் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த தடா பெரியசாமி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

குறிப்பாக வேலூரைச் சேர்ந்த கார்த்தியாயினி என்ற பெண்ணை திட்டமிட்டு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தி உள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த என்னை நிறுத்தாமல் ஏதோ ஒரு பெண்ணை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். 

பட்டியலின அணியின் மாநில தலைவராக இருக்கும் என்னிடம் எதுவும் ஆலோசனை நடத்தாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன் தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் ஆகியோர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர். 

இவர்கள் மூன்று பேரும் போட்ட திட்டம் தான் இது. இவர்கள் மூன்று பேர் தான் கட்சியா? தமிழக பாஜகவில் மாநில நிர்வாகிகள் என்ற பெயரில் ஆளுக்கு ஒரு சீட் என பிரித்துக் கொண்டனர். யாரை எங்கு வேண்டுமானாலும் நிப்பாட்டலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டனர்.

திருவள்ளூர் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த பொன் பாலகணபதியை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். ஆனால் தொகுதியில் பறையர் சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். சாதனத்தை ஒழிப்பேன் என்று பிரதமர் மோடியை ஒருமையில் பேசியவர் திருமாவளவன். 

அவருக்கு எதிராக சிதம்பரத்தில் களத்தில் வேலை செய்த என்னை ஆலோசிக்காமல் ஒரு பெண்ணை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இதற்கு காரணம் திருமாவளவன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் எல் முருகன் கேசவ விநாயகம் ஆகியோரை தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதால் பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். திருமாவளவனிடம் பாஜகவை இந்த 3 பேரும் அடகு வைத்து விட்டனர்” என குற்றம் சாட்டுகிறேன் என்று தடா பெரியசாமி கூறியுள்ளார்.

Previous Post

அதிருப்தியில் தடா : பாஜகவுக்கு டாடா, அதிமுகவுக்கு வெல்கம்…!

Next Post

“தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி பாஜகவில் சேருவார்”..! உறுதியாக கூறிய KTR மீது பாய்ந்த வழக்கு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி பாஜகவில் சேருவார்”..! உறுதியாக கூறிய KTR மீது பாய்ந்த வழக்கு..

"தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி பாஜகவில் சேருவார்"..! உறுதியாக கூறிய KTR மீது பாய்ந்த வழக்கு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கட்சியை விட்டு கட்சித் தாவும் தடா பெரியசாமிக்கு கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In