Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா: வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 30, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திருச்செந்தூர் ஆவணித்திருவிழா: வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று (ஆகஸ்ட் 30) வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா ஏழாம் நாளான இன்று காலை சுவாமி சண்முகர் வெட்டி வேர்ச் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனத்தில் காட்சியருளினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த ஆக. 24 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வெட்டி வேர்ச்சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்

திருவிழா நாள்களில் நாள்தோறும் சுவாமி, அம்மன் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர்.

முக்கிய திருநாளான இன்று ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை 4.30 மணியளவில் சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சேர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று மாலை சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருகின்றார்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ரா. அருள்முருகன், இணை ஆணையர் எஸ். ஞானசேகரன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.



.

Previous Post

`அவருக்கு பாலியல் வன்கொடுமை அனுபவம் நிறைய இருக்கிறது’ – சிரோமணி அகாலி தள தலைவர் பேச்சால் சர்ச்சை | Simranjit Mann says Kangana Ranaut has lot of experience of rape

Next Post

பெங்களூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அண்டர்கிரவுண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் – தென்னிந்தியாவிலே இதுதான் முதல் முற | Palika bazar Bengaluru – explore this south India’s first ever underground market

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெங்களூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அண்டர்கிரவுண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் – தென்னிந்தியாவிலே இதுதான் முதல் முற | Palika bazar Bengaluru – explore this south India’s first ever underground market

பெங்களூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அண்டர்கிரவுண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் – தென்னிந்தியாவிலே இதுதான் முதல் முற | Palika bazar Bengaluru – explore this south India’s first ever underground market

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In