Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள புது நடைமுறை.. நிதி அமைச்சரைச் சந்தித்த சு. வெங்கடேசன் எம்பி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2025
in அரசியல் செய்திகள்
0
ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள புது நடைமுறை.. நிதி அமைச்சரைச் சந்தித்த சு. வெங்கடேசன் எம்பி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 27, 2025 7:44 PM IST

ரிசர்வ் வங்கியின் புதிய நகைக்கடன் நிபந்தனைகளை எதிர்த்து, எம்.பி. சு. வெங்கடேசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, அவற்றை நீக்க வலியுறுத்தினார்.

News18News18
News18

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சந்தித்துப் பேசினார். இந்திய ரிசர்வ் வங்கி, நகைக்கடனுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் அடகு வைத்த நகையைத் திருப்புவதிலும், மறு அடகு வைக்கும்போது சிரமத்தை சந்திப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

நகைக்கடன் நிபந்தனைகளில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்ததைத் திரும்பப் பெற வேண்டும் என்று எம்.பி., சு.வெங்கடேசன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், டெல்லியில் நேரில் சந்தித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன் விதிமுறைகள், கடும் நிபந்தனைகளை நீக்க வலியுறுத்தினார்.

இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., தனது எக்ஸ் பக்கத்தில், “நகைக்கடன் பெறுவது சம்பந்தமாக ரிசர்வு வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. நகைக்கடன் பெறும் போது “கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனோடு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்” என ரிசர்வு வங்கியின் புதிய நிபந்தனை கூறுகிறது. பெரும்பாலான நகைக் கடன்தாரர்கள் தினக்கூலிகளாக, நிலையான மாதச் சம்பளம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வருமானத்திற்கான ஆவணச் சான்றை காண்பிப்பது என்பது இயலாததாகும். அதுமட்டுமல்ல, நகைக் கடனைப் பொறுத்தவரையில் அது 100% பாதுகாக்கப்பட்ட கடன் ஆகும். ஆகவே கடன் தாரரின் திரும்பச் செலுத்தும் திறனை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

அடுத்ததாக “தங்க நகையின் மீதான மூல ரசீதோ அல்லது உடமை உரிமை ஆவணமோ அவசியம் என்கிறது” புதிய விதிமுறை. தங்க நகைகள் என்பது பல பத்தாண்டுகளாகவோ அல்லது இரண்டு மூன்று தலைமுறையாகவோ இருந்து வரும் நிலையில் மூல ரசீதுக்கோ அல்லது உடமை உரிமை ஆவணமோ பெறுவது எளிதல்ல.

நகைக்கடன் என்பது எளிய, நடுத்தர மக்கள் கடன் பெறுவதற்கான கடைசி புகலிடமாகும். வங்கிகளைப் பொறுத்த வரை நூறு சதவிகிதம் லாபம் ஈட்டுதல் மட்டுமல்ல வராக்கடன் என்கிற பிரச்சனையே இதில் இல்லை. அப்படி இருக்கும் சூழலில் நகைக்கடன் மீது புதிதாக இவ்வளவு கடுமையான விதிமுறைகளை ரிசர்வு வங்கி ஏன் விதித்துள்ளது.

ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில் கருத்துகள் பெறுவதற்கான நகல் என்று சொல்லிவிட்டு, அடுத்த பாராவில் “இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. வங்கிகளைப் பொறுத்தவரை நூறு சதவிகித பாதுகாப்பானது, வராக்கடன் என்பது துளியும் இல்லாத ஒன்று நகைக்கடன். அதனால் தான் இது சம்பந்தமாக வங்கிகளிடமிருந்து எந்த புகாரும் இல்லை. அது மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நகையின் விலை கூடிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர குறையவே இல்லை. அப்படியிருக்கும் சூழலில் நகைக்கடன் சார்ந்து இவ்வளவு கடுமையான விதிமுறைகளை, அவசர அவசரமாக ரிசர்வு வங்கி விதிப்பதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகள் எளிய மக்களை கடுமையாக பாதிக்க கூடியது.


ஒன்றிய நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்களை சந்தித்து

சு. வெங்கடேசன் எம் பி மனு.

நகைக்கடன் பெறுவது சம்பந்தமாக ரிசர்வு வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.… pic.twitter.com/Wmn5PiwAgE

— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 27, 2025

கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கு எதிரானதாக உள்ள ரிசர்வு வங்கியின் நகைக்கடன் தொடர்பான புதிய நிபந்தனைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கீழ்க்கண்ட மனுவினை அளித்தேன். மனுவில் உள்ள விபரங்களைக் கேட்டறிந்த நிதியமைச்சர் இதன் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா?

Next Post

டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் தேதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் தேதி!

டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் தேதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In