Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு செயலருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு 

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 3, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு செயலருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு 
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு துறை செயலர் உள்பட 3 பேருக்கு விதிக்கப்பட்ட 2 வார சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் பழைய பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் தோட்டப்பணியாளராக பணிபுரிந்து 2006-ல் ஓய்வு பெற்றார். தனது பணியை 1979-ல் இருந்து வரன்முறைப்படுத்தி, அதற்குரிய பணப்பலன்களை வழங்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை பரிசீலிக்க 2012-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பள்ளிக்கல்வித் துறை தாக்கல் செய்ய மேல்முறையீடு மனு தள்ளுபடியானது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப்யாதவ் (தற்போது நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலராக உள்ளார்), ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் முத்துபழனிசாமி, நெல்லை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலஆண்டோ ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ஞானபிரகாசம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது பிரதீப்யாதவ் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையேற்க மறுத்து பிரதீப்யாதவ் உட்பட 3 பேருக்கும் 2 வார சிறை, தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தும், 3 பேரும் ஆக. 9-க்குள் உயர் நீதிமன்ற பதிவாளர் முன்பு சரணடைய வேண்டும் என்றும் புதன்கிழமை நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யவும், அதுவரை 2 வார சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும் அரசு தரப்பில் வியாழக்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் பிரதீப்யாதவ் உட்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட 2 வார சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

.

Tags: அரசஅவமதபபசயலரககதணடனநதமனறநறததவபபவதககபபடடசறவழகக
Previous Post

சேலம் – ஆடிப்பெருக்கு விழா | நீர் நிலைகளில் குலதெய்வ பூஜை, புனித வழிபாடு.

Next Post

லுக்-அவுட் நோட்டீஸூக்கு எதிராக சுப.உதயகுமார் வழக்கு: நெல்லை எஸ்பி முடிவெடுக்க உத்தரவு 

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
லுக்-அவுட் நோட்டீஸூக்கு எதிராக சுப.உதயகுமார் வழக்கு: நெல்லை எஸ்பி முடிவெடுக்க உத்தரவு 

லுக்-அவுட் நோட்டீஸூக்கு எதிராக சுப.உதயகுமார் வழக்கு: நெல்லை எஸ்பி முடிவெடுக்க உத்தரவு 

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    அதாவது இந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் தண்டனை அடைந்த நபர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது இந்த இடைக்கால தடை என்பது இன்றிலிருந்து சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் அரசு அதிகாரிகள் என்பதால் அரசும் இந்த தடையை நீக்க முன்வராது இந்த 20 வருட காலத்தில் இந்த அரசு அதிகாரிகள் ஓய்வும் பெற்று விடுவர் இதனால் இவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது இதே பொதுமக்கள் என்றால் இந்த இடைக்கால தடை ஐந்து வருடத்தில் நீக்கப்படும் சம்பந்தப்பட்டவர்களை ஜெயிலில்தூக்கி போட்டு விடுவார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In