Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“சபரிமலை தங்கம் மோசடியை மறைக்கவே, நடிகர்கள் வீட்டில் ED ரெய்டு'' – சர்ச்சையை கிளப்பிய சுரேஷ்கோபி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2025
in அரசியல் செய்திகள்
0
“சபரிமலை தங்கம் மோசடியை மறைக்கவே, நடிகர்கள் வீட்டில் ED ரெய்டு'' – சர்ச்சையை கிளப்பிய சுரேஷ்கோபி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பூட்டான் நாட்டில் இருந்து கடத்திக்கொண்டுவரப்பட்ட கார்களை வாங்கிய விவகாரத்தில் மலையாள நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோரது வீடுகளில் இ.டி ரெய்டு நடத்தியது. இந்த நிலையில் கேரளம் முழுவதும் கலந்துகொண்டு விவாதம் என்ற பெயரில் பொதுமக்களுடன் உரையாடும் நிகழ்வை நடத்திவரும் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி பாலக்காடு மாவட்டம் மலம்புழாவில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது சபரிமலை கோயில் துவார பாலகர்கள் சிலைகளின் தங்க கவசங்களில் நடந்துள்ள மோசடி குறித்தும், நடிகர்கள் வீட்டில் இ.டி ரெய்டு நடத்தப்பட்ட விவகாரங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய சுரேஷ்கோபி, “சபரிமலை தங்கம் மோசடி விவகாரத்தை மறைப்பதற்காக இரண்டு நடிகர்களை தராசில் வைத்து அளவிடுவதற்கு கேரள மக்களிடம் விட்டுள்ளார்கள். என்.ஐ.ஏ, இ.டி ஆகியவை ரெய்டு நடத்துவதுடன், விசாரணை நடத்துகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்துகொண்டு நான் அதிகமாக எதுவும் கூறவிரும்பவில்லை.”

சபரிமலை துவார பாலகர்கள்

ஆனாலும், கேரள அரசை பாதிக்கும் விஷயங்கள் வரும்போது மக்களிடம் பிரபலமானவர்களை களங்கப்படுத்த போலீசை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இன்னும் இதுபோன்று நடக்கும். சபரிமலை தங்க கவசங்கள் திருடப்பட்ட விவகாரத்தை மறைப்பதற்காக இதுபோன்று செய்கிறார்கள். ஒரு அரசியலுக்கும் உட்படாதவர் ஐயப்பன்.

சபரிமலையில் நடந்த விஷயத்துக்கு பெரிய தண்டனை பெறவேண்டியது வரும். சபரிமலை தங்கம் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் கேரளாவில் நடக்கப்போகின்றன.

மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி

ஐயப்பன் மனிதராகவும் உள்ளார். எனது மூத்த சகோதரராக ஐயப்பனைப் பார்க்கிறேன். இறைவனின் கணக்குப் புத்தகத்தில் மட்டுமே தவறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இ.டி நடிகர்கள் வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கும் நிலையில், கேரள சி.பி.எம் அரசுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் சபரிமலை தங்கக் கவசம் திருட்டு சம்பந்தமான விவகாரத்தை மறைப்பதற்காக நடிகர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதாக சுரேஷ்கோபி கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை: தங்க கவசத்தை செம்பு கவசம் எனப் பதிந்த அதிகாரி; சஸ்பெண்ட் செய்த தேவசம்போர்டு; என்ன நடந்தது?



.

Previous Post

உலக மனநல தினத்த்தில் மனநல தூதராக தீபிகா படுகோனே நியமனம் | Deepika Padukone Appointed as India’s First Mental Health Ambassador

Next Post

நவம்பர் 1-ம் தேதி முதல், சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100% வரி – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு | America to impose extra 100% tariff to China goods

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ட்ரம்ப்–ஜின்பிங் தொலைபேசி உரையாடல்: டிக்டாக், உக்ரைன், APEC பேச்சுகள்|US China leaders phone conversation Trump Xi APEC

நவம்பர் 1-ம் தேதி முதல், சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100% வரி - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு | America to impose extra 100% tariff to China goods

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In