இதில் கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்ட மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து அந்த மனுவை முடித்து வைத்திருக்கின்றனர்.
இழப்பீடு கோரிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
விஜய் மற்றும் அரசுத்தரப்பு 2 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருக்கின்றனர்.

இது ஒரு துயர சம்பவம், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்திருக்கிறது.
என். ஆனந்த், நிர்மல்குமார் மீதான முன் ஜாமீன் மனுக்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மதியத்துக்கு மேல் விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
