“நன்னடத்தை அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை”
விசாரணையின்போது, நீதிபதிகள் செந்தில் பாலாஜி தரப்பிற்கு கடுமையாக கேள்விகளை முன் வைத்தனர். “நன்னடத்தை அடிப்படையில் உங்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை. அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தினால் மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டது,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், “ஜாமீன் வழங்கப்பட்டபோது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. ஆனால், இப்போது அமைச்சராக இருக்கிறார். அப்போதைய சூழல் வேறு, இப்போதைய சூழல் வேறு,” என்று குறிப்பிட்டனர்.
