இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான ஜெயச்சந்திரனுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த விசாரணையில்தான், மறு தரப்பையும் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘LATIN MAXIM AUDI ALTERAM PARTEM’தான் சட்டக் கல்லூரிகளில் முதல் பாடம், அதை கடைபிடிக்காமல் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்ததாக நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், சவுக்கு சங்கர் வழக்கில் அவசர அவசரமாக உத்தரவுகளை பிறப்பிப்பதில் ஆர்வம் காட்டுவதன் மூலமாக மாநில காவல்துறைக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பாரபட்சம் காட்டியுள்ளார் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியிருந்தார்.
