Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றமா? – துணை குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பதிலடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 20, 2025
in அரசியல் செய்திகள்
0
உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றமா? – துணை குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பதிலடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 17 ஆம் தேதி, டெல்லியில் நடந்த மாநிலங்களவை தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய போது உச்சநீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா?… எனவும், தனது அதிகாரத்தை அணு ஆயுத ஏவுகணையைப் போல உச்சநீதிமன்றம் பயன்படுத்துகிறது எனவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

இதனை தொடர்ந்து, வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பிறகு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், நாடாளுமன்றம் தான் உச்சபட்ச அமைப்பு என கூறினார்.

இந்நிலையில், நாட்டின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்ற பி.ஆர்.கவாய்க்கு, மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிற்கு சென்ற பி.ஆர்.கவாய், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் நிகழ்ச்சியில் மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி பங்கேற்காததற்கு அதிருப்தி தெரிவித்தார்.

நீதிபதிகளை வரவேற்க வரவேண்டும் என்ற நடைமுறையை உயர் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்பது அவசியமில்லை என உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்திரசூட் கூறியிருந்த நிலையில், பி.ஆர்.கவாய் இக்கருத்தை முன்வைத்தார். மேலும், இதனை தான் பெரிதுப்படுத்த விரும்பவில்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும், அனைவரையும்விட அரசியலமைப்பு சட்டம் தான் பெரியது என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி முடிந்து அம்பேத்கர் நினைவிடத்திற்கு சென்ற பி.ஆர்.கவாயை அம்மாநில தலைமைச் செயலாளர் சுஜாதா சௌனிக், டிஜிபி ராஷ்மி சுக்லா மற்றும் மும்பை காவல் ஆணையர் தேவன் பாரதி நேரில் சென்று சந்தித்தனர்.

நாடாளுமன்றம் தான் பெரிது என குடியரசு துணைத் தலைவர் கூறிய நிலையில், அரசியலமைப்பு சட்டம் தான் உயர்ந்தது என பதிலடி கொடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நாட்டின் 3 தூண்களும் சமம் எனக் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு “ஜெய் பீம்” என்று கூறி, நன்றி தெரிவித்த பி.ஆர்.கவாய் மீதான எதிர்பார்ப்பு, தற்போதைய உறுதியான பேச்சு மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

Location :

Mumbai,Maharashtra

தமிழ் செய்திகள்/இந்தியா/

“உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா…?” – துணை குடியரசு தலைவர் கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதிலடி



.

Previous Post

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Next Post

கனமழை: குற்றால அருவியில் குளிக்கத் தடை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கனமழை: குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கனமழை: குற்றால அருவியில் குளிக்கத் தடை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In