வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய 17சி படிவத்தை பொது வெளியில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.
பதிவான வாக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவம் 17-ஐ, 48 மணி நேரத்துக்குள் வாக்குச் சாவடி வாரியாக வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17சி படிவம் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
