Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு – சி.விஜயபாஸ்கருக்கு சம்மன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 7, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - சி.விஜயபாஸ்கருக்கு சம்மன்
34
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுக்கோட்டை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 29-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி ரம்யாவும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் மீதும், இவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

.

Tags: அதகமகச.வஜயபஸகரககசததசமமனசரததவரமனததககவழகக
Previous Post

ஈரோடு தொழிலதிபரிடம் ரூ.13.85 லட்சம் முறைகேடு செய்த பெண் கைது

Next Post

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு நடந்த திமுக பிரமுகர் கொலையில் தனிப்படை விசாரணை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காஞ்சிபுரம் | நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு நடந்த திமுக பிரமுகர் கொலையில் தனிப்படை விசாரணை

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு நடந்த திமுக பிரமுகர் கொலையில் தனிப்படை விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In