மா.சுவுக்கு எச்சரிக்கையும்! மாற்றமும்!
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், குற்றச்சாட்டு பதிவு நடவடிக்கைகளுக்காக மா. சுப்பிரமணியன் மற்றும் காஞ்சனா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கடந்த மே 6ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது இருவரும் ஆஜராகவில்லை. “மே 23, 2025 அன்று இருவரும் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும், இல்லையெனில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்” என நீதிபதி எச்சரித்தார். மேலும், “இனி கால அவகாசம் வழங்கப்படாது” என உறுதியாகத் தெரிவித்து, வழக்கு விசாரணையை மே 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து இருந்தார். இந்த நிலையில், மா.சுப்பிரமணியன் இன்று தனது மனைவி உடன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாடு சென்றுவிட்டார். வழக்கு மற்றொரு நீதிபதிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, குற்றச்சாட்டு பதிவு நடைமுறை தள்ளி வைக்கப்பட்டு, விசாரணை ஜூன் 17, 2025 அன்று நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திடீர் மாற்றம் வழக்கின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.
