Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதுரை: தொடரும் முல்லை நகர் மக்களின் போராட்டம்; தலைமைச் செயலாளருக்கு சு.வெங்கடேசன் அவசரக் கடிதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2024
in அரசியல் செய்திகள்
0
மதுரை: தொடரும் முல்லை நகர் மக்களின் போராட்டம்; தலைமைச் செயலாளருக்கு சு.வெங்கடேசன் அவசரக் கடிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுரை பீபிகுளம் முல்லை நகரில் நீண்டகாலமாக வசித்துவரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி வீடுகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் தயாராகி வரும் நிலையில், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து போராட்டம் நடத்தி வரும் முல்லை நகர் மக்களுக்குப் பல்வேறு கட்சியினரும் ஆதரவளித்து வருகின்றனர்.

முல்லை நகர் மக்கள்

மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இப்பிரச்சினை குறித்து  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பீ.பீ.குளம் அருகில் உள்ள முல்லை நகர் பகுதியில் சுமார் 592 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் முன்னாள் ராணுவத்தினரும் அடங்குவர். அவர்களில் 160-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் அளித்த அங்கீகரிக்கப்பட்ட வீட்டடி மனைகளைப் பணம் செலுத்திப் பெற்று, அதில் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளனர்.

இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பே பீ.பீ.குளம் கண்மாய் இருந்தாலும், தற்பொழுது 3 ஏக்கர் பரப்பளவிற்குத்தான் கண்மாய் இருக்கிறது. அந்த 3 ஏக்கர் கண்மாய்க்கு மூன்று வாய்க்கால்கள் வழியாக  நீர் வந்திருந்தாலும், கடந்த 25 ஆண்டுகளாக நீர்வரத்தின்றி இருந்த வாய்க்கால்கள் முழுமையாக மூடப்பட்டு அதில் கட்டடங்கள், குடியிருப்புகள், கோயில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இந்த கண்மாயை முறையாகத் தூர்வார, பராமரிக்க மாவட்ட நிர்வாகம் தவறியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகச் சமீபத்தில் மதுரையில் பெய்த மழையால் இந்த கண்மாய்ப்பகுதி பிரச்னைக்குரியதாக மாறியிருக்கிறது.

இப்பகுதி தொடர்பான வழக்கு ஒன்றில் 14.08.2023 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த பகுதியிலுள்ள மக்கள் காலி செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் ஆணையிட்டுள்ளது. இதை எதிர்த்து முல்லை நகர் குடியிருப்போர் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட தனி நபர்கள் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கின் இறுதி விசாரணை வருகின்ற 15.11.2024 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சு.வெங்கடேசன்

இந்நிலையில் கடந்த 11.11.2024 அன்று அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளையும் காலி செய்ய வேண்டுமென்ற அறிவிப்பினை மதுரை மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் ஒட்டியுள்ளது. அன்று மாலையிலிருந்து அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள், தமிழ்நாடு முதலமைச்சருக்கு இப்பிரச்னையைக் கொண்டு செல்லும் நோக்கில், அவர்களது தெருக்களிலேயே கூடி ஒன்றாகச் சமைத்து “தொடர் உள்ளிருப்பு போராட்டம்” நடத்தி வருகின்றனர். இதனை அறிந்து மதுரையில் உள்ள கட்சிகள், இயக்கங்கள் ஒவ்வொன்றாக முன்வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் எனது கவனத்திற்கும் இதனைக் கொண்டு வந்த நிலையில், கீழ்க்காணும் கோரிக்கையைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

1. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்று, மதுரை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கக்கூடிய இவ்வழக்கில் அரசின் மூத்த வழக்கறிஞர் மூலமாக, “இந்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்த முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது” என்பதனைத் தெரிவித்து, வீடுகளைக் காலி செய்யும் உயர் நீதிமன்ற உத்தரவை ஒத்தி வைத்திடத் தேவையான சட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

முல்லை நகர் மக்கள்

2. பீ.பீ.குளம் கண்மாய் அமைந்துள்ள மதுரை வடக்கு தாலுகா சர்வே எண் 23-ல் தற்போது நீர்நிலையாக இருக்கும் பகுதியை மட்டும் பாதுகாத்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசிக்கும் பகுதியை “வகை மாற்றம்” (Reclassification) செய்திடும் நடவடிக்கையை உடனடியாக எடுத்திட வேண்டுகிறேன். இதன் மூலம், 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடிசை மாற்று வாரியத்தின் அங்கீகாரம் பெற்று அப்பகுதியில் வாழ்கிற எளிய மக்களின் கோரிக்கையை ஏற்று மீதமிருக்கிற கண்மாய் பகுதியும் மூன்று வாய்க்கால்களும் உரிய முறையில் மீட்டெடுத்துப் பாதுகாக்கும் சூழலும் உருவாகும். எளிய மக்களின் இந்தக் கோரிக்கைகளை தாங்கள் பரிசீலனை செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன்” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

இந்தியாவின் முதல் ‘வெர்டிகல் லிப்ஃட்’ பாலமான பாம்பன் பாலத்தில் தொடங்கிய ஆய்வு – எப்போது பயன்பாட்டுக்கு வரும்? | Railway safety inspection begins at India’s first vertical sea bridge Pamban in Rameshwaram

Next Post

பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் அசத்துவோம்..! பாகிஸ்தான் கேப்டன் நம்பிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் அசத்துவோம்..! பாகிஸ்தான் கேப்டன் நம்பிக்கை!

பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் அசத்துவோம்..! பாகிஸ்தான் கேப்டன் நம்பிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In