மதுராந்தகம் அருகே நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அக்லி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் – ஆஷா தம்பதியரின் மகள் கயல்விழி(17). இவர் நீட் தேர்வுக்கு பயின்று வந்தார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடந்து வரும் நிலையில் கயல்விழி தேர்வுக்கு சரியாக தயாராகாததால் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
