புதுடில்லி: தேர்வு எழுதுவதற்காக டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த மயங் கார்க் என்ற 26 வயது மருத்துவ மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஹரியாணாவை சேர்ந்த மயங் கார்க் (வயது 25) என்ற மாணவர் டில்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். இவர், பல்லப்கரில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் ஐ.எஸ்.பி.டி. நிலையத்துக்கு பயணித்துக் கொண்டிருந்தார்.
ஜவஹர்லால் மெட்ரோ நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மயங் திடீரென்று ரயிலேயே சரிந்து விழுந்துள்ளார். ரயிலில் பயணித்த சக பயணி ஒருவர் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மயங்கை பரிசோதித்த டாக்டர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

