LPG டேங்கர் லாரி சங்க நிர்வாகிகளுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நடத்திய 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு! டேங்கர் லாரிகளில், உதவியாளர்கள் (கிளீனர்கள்) கட்டாயம் என்ற எண்ணெய் நிறுவனத்தின் நிபந்தனைக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! கர்நாடகா மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றாமல் 1000க்கும் மேற்பட்ட LPG டேங்கர் லாரிகள் கடந்த 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம்!

