Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் : பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் : பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மதுரையில் இன்று (ஜன.05) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், நஸூருதீன், மாநில பொருளாளர் அமீர் ஹம்ஸா, மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்ததாவது:

  1. நமது இந்திய திருநாட்டின் உன்னதமான மதச்சார்பின்மை மீதான தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. பல்வேறு வழிகளில் மதச்சார்பின்மைக்கு எதிராக ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. மதச்சார்பின்மை மீதான மறைமுகத் தாக்குதல்கள் அரசின் ஆதரவுடன் இப்போது நேரடியாகவும் வெளிப்படையாகவும் மாறிவிட்டன. அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயகத் தன்மையை வீழ்த்திட அதன் மீது தாக்குதல் தொடுப்பதும், சிறுமைப்படுத்துவதும், இறுதியில் அதனை ஒழிப்பதுமான பாசிச திட்டங்களை நிறைவேற்றும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. ஒருபுறம் மதச்சார்பின்மைக்கு எதிராக அதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் நடந்துவரும் வேளையில், மறுபுறம் மதவாதம் அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக மாறிக்கொண்டிருக்கின்றது. மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மதவெறுப்புகள் அங்கிங்கெனாதபடி நாட்டின் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. இவையெல்லாவற்றிற்கும் தீர்வாக, அரசியலமைப்பை, அதன் உன்னத உயர்ந்த கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

ஆகவே, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை!’ என்ற முழக்கத்தோடு, ஜனவரி 07 அன்று மதுரை மாநகரில் மாபெரும் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்துகின்றது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள மதச்சார்பின்மையை காக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்திட வேண்டும். இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி, மாண்புமிகு தமிழக எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். அதேபோல் தவத்திரு திருவடிக்குடில் அடிகளார், பேராயர் யுவான் அம்புரோஸ், இஸ்லாமிய ஆராய்ச்சி மைய நிறுவனர் மவுலவி ஷாஹூல் ஹமிது ஜமாலி, ஈரோடு நூருல் இஸ்லாம் மஸ்ஜித் தலைமை இமாம் மவுலவி முஹம்மது தையிப் தாவூதி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநில தலைவர் மூவாற்றுப்புழா அஷ்ரப் பாகவி, கர்நாடகா மாநில தலைவர் அப்துல் மஜீத் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தவிருக்கின்றனர். நம் இந்திய தேசத்தின் மதச்சார்பின்மையை பாதுகாக்க இந்த மாநாட்டில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

  1. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், போக்குவரத்துத் துறை காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஒய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 09 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த காரணத்தால், இந்த வேலை நிறுத்த அறிவிப்பை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் சார்ந்த இந்த கோரிக்கைகள் என்பது புதிய கோரிக்கை அல்ல. கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக அரசிடம் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். இந்த கோரிக்கைகளை செயல்படுத்த அரசு மேற்கொண்ட காலதாமதமும். அலட்சியமுமே இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு காலம் என்பது பொங்கல் பண்டிகை விடுமுறை காலம் என்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆகவே, தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி, வேலை நிறுத்தத்தை கைவிடச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
  2. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, சென்னைக்கு வெளியில் கிளாம்பாக்கத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் நவீன முறையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், பயணிகளின் பயன்பாட்டுக்கு மிகப்பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சென்னையின் பல பகுதிகளில் இருந்து இந்த பேருந்து நிலையத்திற்கு நேரடியாக பயணிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்தில் இருந்து, மூன்று மணி நேரப் பயணம் தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த பேருந்து நிலையத்தில் இறங்கினால் சம்பந்தப்பட்ட பேருந்து நிற்கும் இடத்தை தேடி நடப்பதற்கே அரைமணி நேரம் செலவாகும் நிலை உள்ளதாகவும், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், குடும்பத்துடன், லக்கேஜூடன் செல்பவர்களுக்கும் சிரமமாக உள்ளதாக பயணிகள் தெரிவிப்பதை காண முடிகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை பயணிகள் அடைய மெட்ரோ வசதி, பேருந்து வசதி, ஆட்டோ-கார் வசதிகள் ஏராளமாக இருந்தன. ஆனால், இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதுபோன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. ஆட்டோ வசதி இங்கு இருந்தாலும், நகரின் உட்பகுதிக்குள் செல்ல பல மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற ஏராளமான வசதி குறைபாடுகள் உள்ளன. ஆகவே, அதனை சரிசெய்வதற்கு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமாக சொல்லப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை அரசு அடுத்த ஓராண்டுக்குள் முழுவதும் மூடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவறான முடிவாகும். ஏனெனில், இந்த பேருந்து நிலையத்தை நம்பி சுமார் 3 ஆயிரம் ஆட்டோக்களை ஓட்டும் தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான வாடகை கார்களை இயக்கும் தொழிலாளர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு-குறு தொழில் நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகள், தங்கும் விடுதிகள் என மிகப்பெரும் வேலைவாய்ப்புகள் உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடும் பட்சத்தில் பல ஆயிரக்கணக்கான வேலையிழப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகும். ஆகவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பரந்து விரிந்த ஒரு மாநிலத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் திட்டங்களை செயல்படுத்துவதை தவிர்ப்பதன் மூலமும், போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்புகளை முறையாக மேம்படுத்துவதன் மூலமும் மட்டுமே நெருக்கடிகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். மாறாக நகர விஸ்தரிப்பு, திட்டங்கள் குவிப்பு போன்றவற்றை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் நெருக்கடிகள் என்பது தொடர்கதையாகவே இருக்கும் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

  1. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கடந்த ஆண்டுகளைப் போல அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் தமிழக அரசு ரூ.1000 ரொக்கப்பணம் தர வேண்டும். அதேபோல், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண உதவித் தொகையில் ஏற்பட்டுள்ள குளறுபடி காரணமாக மக்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு ரு.6 ஆயிரம் நிவாரண உதவித் தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் என்பது இதுவரை வரலாற்றில் நிகழ்ந்திராத பேரிடர் என்பதால் தமிழக அரசு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், மழை வெள்ள பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.6 ஆயிரம் வழங்குவதோடு, அதிகமான பாதிப்புகள், இழப்புகளை சந்தித்த மக்களுக்கு அவர்களின் இழப்பை கணக்கிட்டு கூடுதலாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. தமிழக அரசை வலியுறுத்தியது.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரண உதவித் தொகை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் பாரபட்சம் காரணமாக மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில், வருவாய் துறையால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு மற்ற பகுதிகளில் ரூ.1000 மட்டும் வழங்கப்பட்டதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். குறிப்பாக கிராமப் பகுதிகளில் ரூ.1000 மட்டுமே நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு விவசாயம் தான் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கும் சூழலில், அவர்களுக்கு நிவாரண உதவித் தொகையை குறைவாக வழங்கியது ஏற்புடையதல்ல. ஆகவே, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டும். மேலும், எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு வழங்கும் பொங்கல் பரிசு திட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு இரட்டிப்பு பொங்கல் பரிசினை தமிழக அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Previous Post

“டிரம்ப் அதிபர் ஆனால் இது தான் நடக்கும்”: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Next Post

சிறைத்துறை டி.ஐ.ஜி பழனிக்கு மக்கள் ஆணையம் இதழ் சார்பில் “மிஸ்டர் ஆணையர்-2023” விருது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிறைத்துறை டி.ஐ.ஜி பழனிக்கு மக்கள் ஆணையம் இதழ் சார்பில் “மிஸ்டர் ஆணையர்-2023” விருது

சிறைத்துறை டி.ஐ.ஜி பழனிக்கு மக்கள் ஆணையம் இதழ் சார்பில் "மிஸ்டர் ஆணையர்-2023" விருது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In