மோடியின் பலவீனம்
உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சதிகளை முறியடிக்க வேண்டிய தேவை இப்போது இருக்கிறது. ஏகாதிபத்திய சதி என்பது ஏதோ போரினால் வருவது மட்டுமல்ல. இப்போது அமெரிக்கா விதித்துள்ள 50% வரியும் ஏகாதிபத்திய சதிதான். இதை பாஜக அரசு கடுமையாக எதிர்த்தாலும், இதுகுறித்து வெளிப்படையான பதிலை ஒன்றிய அரசும் பிரதமர் மோடியும் பதிவு செய்ய வேண்டும்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் 5 சுற்று பத்திர பேச்சு வார்த்தைகள் முடிந்து 6வது சுற்று பேச்சுவார்த்தைக்கு நாள் குறித்துள்ள நிலையில் ஏதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக வரியை விதிக்க வேண்டும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் பல முறை பேசியிருக்கிறார். அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட எதிர்க்கட்சியினர் கேள்விகளாக எழுப்பினோம். ஆனால் பிரதமர் மோடி அதுகுறித்து பதிலளிக்கவில்லை. இது அவர்களின் பலவீனத்தின் அடையாளம்.
ஆனால் கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பலத்தின் அடையாளமாக இருந்தார். அந்த நாட்டு மக்களுக்கு காவல் அரணாக இருந்தார். அதனால் உலகத் தலைவர்களுக்கு அடையாளமாக இருக்கிறார்.” என்றார்.

