சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 25) மாலை தொடங்கியது.
இதில், முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திமுக அமைச்சர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
திரைத்துறையிலிருந்து, வெற்றிமாறன், மிஷ்கின், மாரி செல்வராஜ், தியாகராஜா குமாரராஜா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களால் பயன்பெற்ற மாணவ மாணவிகள் மேடையில் நெகிழ்ச்சியாகப் பேசினர்.
அதைத்தொடர்ந்து, 2025-26 கல்வியாண்டுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களை ஸ்டாலினும், ரேவந்த் ரெட்டியும் சேர்ந்து தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தில், 2,65,318 பேர் பயன்பெறுவார்கள் என்றும் அதில் அறிவிக்கப்பட்டது.
