சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் ரூ. 277 கோடி மதிப்பில் பாரத் சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார் முதல்வர்.

இவ்விழாவில் AI தொழில்நுட்பம் குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
“எதுவானாலும் கூகுள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திடம் கேட்கலாம் என்ற மெத்தனத்தில் இருந்துவிடக்கூடாது.
மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்த வேண்டும் என்பது நமது கடமை.
தேவையற்ற தகவல்கள் தற்போது அதிகமாகியுள்ளது. குழந்தைகளுக்கு சரியான விஷயத்தைக் கற்று தர வேண்டும்.
தொழில்நுட்பம், மனித சந்ததிக்கான வேறுபாட்டை உணர்த்த வேண்டும்” என்றார்.
