கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்து இழப்பீட்டை அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
