Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிறப்பு நாடாளுமன்ற கூட்ட ராகுல் காந்தி கடிதம்..! ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க கோரிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 16, 2025
in அரசியல் செய்திகள்
0
சிறப்பு நாடாளுமன்ற கூட்ட ராகுல் காந்தி கடிதம்..! ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 11, 2025 2:41 PM IST

ராகுல் காந்தி, பாகிஸ்தான் தாக்குதல் விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராகுல் காந்திராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் குறித்து சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், கடந்த மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று இந்திய ராணுவ படைகள் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து மே 8 மற்றும் 9ஆம் தேதிகள் இந்தியா – பாகிஸ்தானுக்கிடையே கடும் தாக்குதல் நடைபெற்றது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் டிரோன்களைக்கொண்டும், ஏவுகணைகளை கொண்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் தீவிரமடைந்த நிலையில், பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறியது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டு சமரசத்தை ஏற்படுத்தினார். இதன்பின்னர் இருநாடுகளும் தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது.

இந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராஜாங்க உறவுகள் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

LoP Shri @RahulGandhi writes to PM Modi, reiterating the unanimous request of the Opposition to convene a special session of Parliament immediately to discuss the Pahalgam terror attack, Operation Sindoor and the India-Pakistan ceasefire, first announced by U.S. President Trump. pic.twitter.com/AhKRjRsunk


— Congress (@INCIndia) May 11, 2025

இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள ராகுல் காந்தி, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

Next Post

மெட்ரோ ரயிலில் வாட்ஸ்ஆப் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை முடங்கியது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மெட்ரோ ரயிலில் வாட்ஸ்ஆப் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை முடங்கியது!

மெட்ரோ ரயிலில் வாட்ஸ்ஆப் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை முடங்கியது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In