Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பணிமனையில் டீசலுக்கு பதில் மின்சாரம் பயன்பாடு; எல்எச்பி ரயில் பெட்டிகளின் பராமரிப்பு செலவில் ரூ.94 லட்சம் சேமிப்பு: தெற்கு ரயில்வே

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பணிமனையில் டீசலுக்கு பதில் மின்சாரம் பயன்பாடு; எல்எச்பி ரயில் பெட்டிகளின் பராமரிப்பு செலவில் ரூ.94 லட்சம் சேமிப்பு: தெற்கு ரயில்வே
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், வசதியான பயணத்துக்காகவும் சாதாரண பெட்டிகளுக்கு பதிலாக, எல்எச்பி எனும் நவீன பெட்டிகளை உற்பத்திசெய்ய ரயில்வே வாரியம் கடந்த 2016-ம் ஆண்டு கொள்கை முடிவுஎடுத்தது. இதைத் தொடர்ந்து,எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, விரைவு ரயில்களில் இணைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு முறை பயணம் முடிந்த பிறகும், பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரயில்கள் சுத்தம் செய்யப்படும். பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பான பணிகளுக்காக ஒரு நாளுக்கு 1.84 லட்சம் லிட்டர் டீசல் நுகரப்பட்டது. இதனால், ஆண்டுக்கு ரூ.668 கோடிக்கு மேல்செலவானது.

இதையடுத்து, எல்எச்பி பெட்டிகளை பரிசோதிக்கவும், பராமரிக்கவும் 750 வோல்டேஜ் மின்சாரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.210 கோடி செலவிடப்பட்டது.இதன்காரணமாக, பிட்லைன்களில் எல்எச்பி பெட்டிகளை பராமரிப்பதற்கான செலவில் ரூ.500 கோடிக்கு மேல் சேமிக்கப்படுகிறது.

இதேபோல, தெற்கு ரயில்வேயில் எல்எச்பி பெட்டிகளை பராமரிக்க, 750 வோல்டேஜ் மின்சார வசதியுடன் பிட்லைன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “தெற்கு ரயில்வேயில் 45 பிட்லைன் அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதுவரை சென்னை பேசின் பாலம் பணிமனையில் 14, எழும்பூர் கோபால்சாமி நகர் – 3, தாம்பரம் – 2, மதுரை – 4, திருநெல்வேலி – 3, நாகர்கோவில் – 3, கோயம்புத்தூர் – 2, திருச்சி – 2 உட்பட41 பிட்லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு 750 வோல்டேஜ் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எல்எச்பி பெட்டிகள் பராமரிப்பு செலவில், கடந்த ஜனவரி முதல் இதுவரை ரூ.94.13 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 4 பிட்லைன்கள் விரைவில் அமைக்கப்படும்” என்றனர்.

.

Tags: எலஎசபசமபபசலவலடசலககதறகபடடகளனபணமனயலபதலபயனபடபரமரபபமனசரமர.94ரயலரயலவலடசம
Previous Post

Amudhavum Annalakshmiyum Aug 22: அமுதாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..மாயா பற்றிய உண்மைகள்.. அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட்

Next Post

சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In