புதுடில்லி, புதுடில்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளதால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளார்.
தலைநகர் புதுடில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த சில நாட்களாக, காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், சுவாச பிரச்னை பாதிப்புள்ள காங்., முன்னாள் தலைவர் சோனியாவை, வேறு இடத்துக்கு குடிபெயரும்படி சமீபத்தில் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதன்படி அவர், காங்., ஆளும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு தற்காலிகமாக நேற்று இடம் பெயர்ந்தார்.
காற்று மாசு பிரச்னையில் இருந்து தப்பிக்க, புதுடில்லியில் இருந்து சோனியா இடம் மாறுவது முதன்முறையல்ல. 2010ல், காற்று மாசு காரணமாக, டாக்டர்கள் அறிவுரைப்படி, அவர் கோவாவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

