அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரான ஜார்ஜ் சோரோஸ், வெளிநாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கக்கூடியவர் எனும் விமர்சனம் உண்டு. இதை வைத்துதான் இப்போது பா.ஜ.க, “காஷ்மீரை தனிநாடு’ என கூறும் சக்திகளோடு காங்கிரஸ் இணைந்திருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறது. ஆசிய பசுஃபிக் ஜனநாயக தலைவர்களின் கூட்டமைப்பில் சோனியா காந்தி இணை தலைவராக இருக்கிறார்.
அந்த அமைப்புக்கு ஜார்ஜ் சோரோஸின் அறக்கட்டளைதான் நிதியுதவிகளை செய்து வருவதாக பாஜக கூறுகிறது. ‘அந்த ஆசிய பசுஃபிக் அமைப்பு காஷ்மீர் தனி நாடு எனும் பார்வையை கொண்டது. அந்த அமைப்புடன் சோனியா காந்தி தொடர்பில் இருப்பதன் மூலம் இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகளின் அரசியல் தலையீட்டுக்கு உதவுதை விளங்கிக் கொள்ள முடியும்.