Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாத மகன், மகள் பணி நீக்கம்: ஆட்சியர் அதிரடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 29, 2024
in Default
1
தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாத மகன், மகள் பணி நீக்கம்: ஆட்சியர் அதிரடி
66
SHARES
107
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாத மகன், மகளை பணி நீக்கம் செய்து குமுளி மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தேனி மாவட்ட எல்லை அருகே கேரள மாநிலத்தைச் சேர்ந்த குமுளி அமைந்துள்ளது. இங்கிருந்து 3 கிமீ. தொலைவில் அட்டப்பள்ளம் அருகே லட்சமேடு பகுதியில் வசித்து வந்தவர் அன்னக்குட்டி மேத்யூ(72). கணவர் இறந்த நிலையில் இவர் தனியே வசித்து வந்தார். இவரது மகன் சஜூமோன்(55), கேரளா கூட்டுறவு வங்கியில் வசூல் முகவராகவும், மகள் சிஜூ(52) ஊராட்சி அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராகவும் பணிபுரிந்தனர். திருமணமாகி தனித்தனியே அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அன்னக்குட்டியின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்ட இருவரும் தங்களது தாயை கவனிக்கவில்லை. இதனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மயங்கியே கிடந்தார் அன்னக்குட்டி. தகவல் கொடுத்தும் இருவரும் வராததால் அருகில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். குமுளி ஆய்வாளர் ஜோபின் ஆண்டனி, உதவி ஆய்வாளர் மணி ஆகியோர் கடந்த வாரம் குமுளி அரசு மருத்துவமனையிலும், பின்பு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். இருப்பினும் கடந்த 24-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

தாய் இறந்த தகவலை பலமுறை தெரிவித்தும் இருவரும் இறுதி சடங்கு செய்யக்கூட வரவில்லை. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் குமுளிக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு அட்டப்பள்ளத்தில் உள்ள அன்னக்குட்டியின் உடன் செயின்ட்தாமஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. போலீஸார் மற்றும் பொதுமக்கள் இறுதி சடங்குகளில் பங்கேற்றனர். தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையிலும், இறந்தபோதும் கூட பிள்ளைகள் வராதது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் போலீஸார் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் இடுக்கி ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

Previous Post

56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!

Next Post

அமைச்சர் மீதான சூமோட்டோ வழக்கு: உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமைச்சர் மீதான சூமோட்டோ வழக்கு: உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி..!

அமைச்சர் மீதான சூமோட்டோ வழக்கு: உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    மாவட்ட ஆட்சியரின் இந்த பணி நீக்க உத்தரவு தேவையில்லாதது அதாவது சட்ட விரோதமானது இறுதிச் சடங்கு செய்வது அவரவர் சொந்த விருப்பம் இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட முடியாது அந்த அம்மா தனது பிள்ளைகளை எப்படி வளர்த்தார்கள் என்பது தெரியவில்லை அதாவது அன்பாக அரவணைத்து வளர்க்கவில்லை இதில் அவரது பிள்ளைகள் இருவருமே பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த வெறுப்பின் காரணமாகவே இறுதிச் சடங்கிற்கு வராமல் இருந்துள்ளனர் இது அவர்களுடைய சொந்த விருப்பம் இதில் கலெக்டர் தலையிட முடியாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In