Last Updated:
தன்னைத் தானே ‘பியூட்டி குயின்’ என்று அழைத்துக்கொள்ளும் மஹி சிங், தனது ஃபாலோயர்சிடம் நிதி கேட்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூரைச் சேர்ந்த மஹி சிங் என்ற சமூக ஊடகப் பிரபலம், தான் புதிதாக வாங்க விரும்பும் ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) வாங்குவதற்காக, தனது ஃபாலோயர்ஸிடம் நன்கொடை கேட்கத் தொடங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சுமார் ₹1.49 லட்சம் மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனை வாங்க, தனது பின்தொடர்பவர்கள் ஒவ்வொருவரும் ₹1 அல்லது ₹2 நன்கொடை அளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தன்னைத் தானே ‘பியூட்டி குயின்’ என்று அழைத்துக்கொள்ளும் மஹி சிங், தனது ஃபாலோயர்சிடம் நிதி கேட்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அதாவது, தனது தந்தை மூன்று மாதங்களுக்கு முன்புதான் தனக்கு ஐபோன் 16-ஐ பரிசளித்ததாகவும், ஆனால் தற்போது புதிய மாடலை (iPhone 17 Pro Max) அவர் வாங்கி தருவதற்கு மறுத்து விட்டதாகவும் மஹி சிங் கூறியுள்ளார்.
लखीमपुर की ब्यूटी क्वीन माही सिंह एक एक,दो दो रुपये मांग रही है 17 प्रो मैक्स फोन लेने के लिए….. pic.twitter.com/YvpoJymsH9
— Sajid Ali (@Sajid7642) September 25, 2025
நீங்கள் அனைவரும் 1, 2, 3 ரூபாய் வீதம் எனக்கு உதவினால், நான் இந்த போனை வாங்க முடியும். இது என் கனவை நனவாக்கும்” என்று அவர் அந்த வீடியோவில் உருக்கமாகக் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
September 27, 2025 10:08 PM IST

