Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மோடிக்கு OPS புகழாரம்: பட்ஜெட்டும் அப்படித்தான் இருக்கும்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2024
in Default
1
மோடிக்கு OPS புகழாரம்: பட்ஜெட்டும் அப்படித்தான் இருக்கும்…
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: திமுக அரசுக்கு எதிரான கோபத்தை மக்கள் வரும் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பத்தாண்டுகளில் இந்தியா தன்னிறைவு பெறும் நாடாக இருக்கும், என, ஏற்கெனவே பிரதமர் மோடி தெரிவித்தார். அதன் அடிப்படையில் நடப்பாண்டு பட்ஜெட் அறிக்கை இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.

மின்கட்டண உயர்வால் ஏழை முதல் மேல்தட்டு மக்கள் வரையிலும் மிகப்பெரிய சுமையை திமுக அரசு தந்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். காவிரி பிரச்சினையில் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை சட்டபூர்வமாக உச்ச நீதிமன்றம் வரையிலும் சென்று போராடி, வாதாடி பெற்றுத் தந்தார்.

இதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆளும் மாநில அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் உண்டு. அவர் இண்டியா கூட்டணியில் இருப்பதால் தனக்கான செல்வாக்கை பயன்படுத்தி, கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நீரை தமிழகத்துக்கு பெற்றுத் தருவதில் முனைப்பு காட்டவேண்டும்.

2026-ல் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை தொடரும் என்பதெல்லாம் முடியாது. அனைத்து கட்சிகளும் நாங்களே மீண்டும் வெற்றி பெறுவோம் என, கூறுவது வாடிக்கை. தேர்தல் முடிவு, இறுதித் தீர்ப்பு மக்களுடையது. அம்மா உணவகத்துக்கு ரூ. 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

ஆனால் அம்மா உணவகம் மட்டுமின்றி அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கிய திட்டங்கள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. திமுக அரசுக்கு எதிராக மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். அது வரும் தேர்தலில் வெளிப்படும். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

Previous Post

மேலும் 4 IAS அதிகாரிகள் பொய் ஊனமுற்றோர் சான்றிதழ் சமர்பித்து அதிகாரி ஆகியுள்ளது அம்பலம்: குஜராத் அரசு அதிரடி..

Next Post

150 பேர் பலி: ‘உங்களுக்கு அடைக்கலம் அளிக்க நாங்கள் தயார்’ – ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
150 பேர் பலி: ‘உங்களுக்கு அடைக்கலம் அளிக்க நாங்கள் தயார்’ – ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா..

150 பேர் பலி: 'உங்களுக்கு அடைக்கலம் அளிக்க நாங்கள் தயார்' - ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அடுத்த பத்து ஆண்டுகளில் அடுத்த 10 ஆண்டுகளில் என்று சொல்லிச் சொல்லியே அதாவது எதிர்காலத்தில் என்கிற ஆசையை காட்டி நிகழும் காலத்தில் மக்களை மோசம் செய்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In