அமைதியான மாநிலத்தின் தான் தொழில் வளரும், சுற்றுலாப் பயணிகள் வருவார்கள், இதற்கு காரணம் எனது துறையான காவல்துறை. சட்டம் – ஒழுங்கு சீராக இருப்பதால்தான் தமிழகத்தில் கலவரமின்றி அமைதியாக இருக்கின்றன.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இது மணிப்பூர் அல்ல, ஜம்மு – காஷ்மீர் அல்ல, கும்பமேளா மரணம் இங்கு நிகழவில்லை.
பொதுமக்களும் காவல்துறையினரும் ஒருவருக்கொருவர் கணிவாக நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இருதரப்பினரும் நண்பர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சட்டம் – ஒழுங்கை பாதுகாத்து இரவுபகலாக வேலை செய்யும் காவல்துறையினருக்கான தனி நாளை அறிவிக்க விரும்புகிறேன். 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாள் கொண்டாடப்படும்.
இந்த நாளில் கடமை, கண்ணியத்தை பின்பற்றி செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காட்சிகள் நடத்தப்படும். ரத்த தான முகாம்கள் நடத்தப்படும்.
நீலகிரி, தருமபுரியில் ஆயுதப் படை காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்படும். காவல்துறைக்கு 350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும். 50 தடயவியல் நடமாடும் வாகனங்கள் வாங்கப்படும்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியைவிட 1,000 மடங்கு சாதனைகள் செய்துள்ளோம். அடமானம் வைக்க நினைப்பவர்களாலும் அபகரிக்க நினைப்பவர்களாலும் தமிழகத்தை ஒருபோதும் சூறையாட முடியாது.
தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் 1 தான். 2026-ல் திராவிட மாடல் 2.0 லோடிங்” எனத் தெரிவித்தார்.
